மீண்டும் அமலுக்கு வரும் பழைய ஓய்வூதிய திட்டம்? மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்!

0
261

பழைய ஓய்வூதிய திட்டம் என்பது சில வருடங்கள் முன்பு வரையிலும் நாடு முழுவதும் நடைமுறையில் இருந்த ஒன்றுதான். ஆனால் மத்திய அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகம் செய்த பின்னர் சட்டையிட குறைய அனைத்து மாநிலங்களுமே பழைய ஓய்வூதிய திட்டத்தை முற்றிலுமாக கைவிட்டு விட்டனர்.

அதே நேரம் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களிலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

அன்னையும் குஜராத் மாநிலத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்து அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

இதற்கு நடுவே ஜார்கண்ட், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் மறுபடியும் அமலுக்கு வரவிருப்பதாக அந்தந்த மாநில அரசுகள் தெரிவித்துள்ளனர்.

தற்சமயம் பஞ்சாப் மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக பரிசீலனை செய்யவிருப்பதாக அங்கே சமீபத்தில் புதிதாக அமைந்த ஆம் ஆத்மி அரசு அறிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்திய கூறுகளை அரசு ஆராயும் என்று முதலமைச்சர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக சமூக வலைதளப் பதிவில் அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக எங்களுடைய அரசு பரிசீலனை செய்து வருகிறது.

இதன் சாத்திய கூறுகள் தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும் என்று தலைமைச் செயலாளரிடம் அறிவுறுத்தியுள்ளேன். ஊழியர்களின் அரணை காப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டிலேயே பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தும் முதலாவது மாநிலம் சத்தீஸ்கர் என்று சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஜாதகம் மாநிலமும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளில் மும்முரமாகியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்திலும் கூட பழைய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்வதற்கான பரிசீலனை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

பழைய ஓய்வூதிய திட்டம் கடந்த 2004 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி ரத்து செய்யப்பட்டது இதனை அடுத்து புதிய ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது.

கடந்த 1-1 2004 ஆம் ஆண்டுக்கு பிறகு அரசு பணியில் இணைந்த மத்திய அரசு ஊழியர்களை தவிர்த்து அதாவது பாதுகாப்பு படையினரை தவிர்த்து எல்லோருக்கும் புதிய ஓய்வூதிய திட்டம் பொருந்தும் என்று அரசு தெரிவித்தது.

பழைய ஓய்வூதிய திட்டம் என்பது ஒரு ஊழியர் கடைசியாக பெற்ற ஊதியத்தின் அடிப்படையில் மாதம்தோறும் பெற்றுக் கொள்ளும் ஓய்வூதியமாகும்.

ஆனால் புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்கள் ஓய்வு பெறும்போது 60% பணி முதிர்வு தொகையை பெற்றுக் கொள்ள வேண்டும்.

மீதமுள்ள 40% தொகையை ஆனுய்டி திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். இதன்படி கிடைக்கும் பலன்கள் கூடுதலாக இருக்கும் என்றாலும் அதற்கு உத்திரவாதமில்லை என்றும் சொல்லப்படுகிறது.

Previous articleஉடலுறுவுக்கு மறுத்ததால் ரிசார்ட்டில் 19 வயது இளம்பெண் கொடூர கொலை! பாஜக பிரமுகர் மகன் கைது
Next articleகருப்பாக இருக்கும் உதட்டை கலராக மாற்ற ஒரு எளிய வழி