திமுகவின் உட்கட்சி தேர்தல்! நிர்வாகிகள் போட்டி போட்டுக் கொண்டு விண்ணப்பம் தாக்கல் செய்தனர்!

0
123

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று திமுகவின் 21 மாவட்ட செயலாளர்களுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெற்றது. இதில் திமுகவைச் சார்ந்த முன்னணியின் போட்டி போட்டு விண்ணப்பம் செய்தார்கள். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மூன்றாம் மாவட்டத்துக்கான வேட்பாளர் தாக்கல் நாளைய தினம் நடைபெறுகிறது.

திமுகவின் 15 ஆவது பொதுத் தேர்தலை முன்னிட்டு மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்கான வேற்றுமொரு தாக்கல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று ஆரம்பமானது.

முதல் நாளான நேற்று முன்தினம் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி போன்ற 19 மாவட்டங்களுக்கான வேட்புமனுத் தாக்கல் நடந்தது.

இரண்டாம் நாளான நேற்றைய தினம் நீலகிரி, ஈரோடு வடக்கு, கோவை தெற்கு, கோவை மாநகர், கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு, தர்மபுரி கிழக்கு, தர்மபுரி மேற்கு, நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, சேலம் மாநகர், கரூர், திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, திருச்சி மாநகர் உட்பட 21 மாவட்டங்களுக்கான வேட்பு மனு தாக்கல் நடந்தது.

இதில் மாவட்ட செயலாளர் பதவிக்கு அமைச்சர்கள், தற்போதைய மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என்று போட்டி போட்டுக் கொண்டு விண்ணப்பம் வாங்கிச் சென்றார்கள்.

இந்த நிலையில் இன்று புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், நாகை வடக்கு, நாகை தெற்கு, மயிலாடுதுறை, தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு, தஞ்சை மாநகர், கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, கள்ளக்குறிச்சி வடக்கு, கள்ளக்குறிச்சி தெற்கு, விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் மாநகர் மாவட்டங்களுக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெறுகிறது.

அதோடு நாளைய தினம் வேலூர் கிழக்கு, ராணிப்பேட்டை, வேலூர் மாநகர், வேலூர் மேற்கு, திருப்பத்தூர், திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, திருவள்ளூர் மாநகர், சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை கிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு, உள்ளிட்ட மாவட்டங்களுக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெறுகிறது.

Previous articleஅஜித் வடிவேலுவுக்கு இடையில் என்ன பிரச்சனை…ஏன் இணைந்து நடிக்கவில்லை… சீக்ரெட் சொன்ன நடிகர்!
Next article “லாட்டரியில் 25 கோடி ஜெயித்ததும் நிம்மதி போச்சு…” புலம்பும் ஆட்டோ டிரைவர்!