அஜித் வடிவேலுவுக்கு இடையில் என்ன பிரச்சனை…ஏன் இணைந்து நடிக்கவில்லை… சீக்ரெட் சொன்ன நடிகர்!

0
285

அஜித் வடிவேலுவுக்கு இடையில் என்ன பிரச்சனை…ஏன் இணைந்து நடிக்கவில்லை… சீக்ரெட் சொன்ன நடிகர்!

அஜித் வடிவேலு ஆகிய இருவரும் ராஜா படத்துக்குப் பிறகு இணைந்து நடிக்கவில்லை என்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய குறையாக உள்ளது.

தமிழ் சினிமாவில் தங்கள் செல்லும் பாதையில் உச்சம் தொட்ட இரு நடிகர்கள் அஜித்தும் வடிவேலுவும். வடிவேலு அஜித்தோடு இணைந்து நடித்தது மிகச்சில படங்களே. கடைசியாக இருவரும் இணைந்து நடித்தது இயக்குனர் எழில் இயக்கிய ராஜா திரைப்படத்தில்தான். அதன் பின்னர் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இன்னும் இணைந்து நடிக்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையே ஏதோ பிரச்சனை என்று திரை வட்டாரங்களிலும் ரசிகர்கள் மத்தியிலும் பேசப்பட்டு வருகிறது.

இதற்கான பல காரணங்களும் சொல்லப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தற்போது வடிவேலுவோடு பல காமெடி காட்சிகளில் நடித்துள்ள நடிகர் ஒருவர் இதற்கான காரணம் என்ன என்பதை சமீபத்தில் பகிர்ந்துள்ளார். அதில் “வடிவேலு சார் அஜித்தை விட வயதில் மூத்தவர். அந்த உரிமையில் அவர் அஜித்தை பேர் சொல்லி ராஜா பட ஷூட்டிங்கின் போது அழைத்துள்ளார். ஆனால் இது அஜித்துக்குப் பிடிக்கவில்லை போல இருக்கிறது. அதனால் இருவருக்கும் இடையே விரிசல் எழுந்துள்ளது. அதனால்தான் இருவரும் இணைந்து அதன் பின் நடிக்கவில்லை. அஜித் தன் படங்களில் வடிவேலுவை வேண்டாம் என சொல்லியிருக்கிறார்” என்று கூறியுள்ளார்.

சக நடிகர்கள் மேல் மிகுந்த மரியாதையோடு பழகும் அஜித் இதுபோல நடந்திருப்பாரா என்று ரசிகர்கள் குழப்பத்துக்கு ஆளாகியுள்ளனர். எது எப்படியோ இருவரும் சேர்ந்து நடிக்காதது ரசிகர்களுக்கு மிகப்பெரிய இழப்புதான்.

Previous articleஇந்திய மக்களே ஜாக்கிரதை! கனடா வாழ் இந்தியர்களை எச்சரிக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்!
Next articleதிமுகவின் உட்கட்சி தேர்தல்! நிர்வாகிகள் போட்டி போட்டுக் கொண்டு விண்ணப்பம் தாக்கல் செய்தனர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here