பொன்னியின் செல்வன் திரைப்படத்தைக் குழந்தைகள் பார்க்கலாமா? வெளியான சென்ஸார் தகவல்!

Photo of author

By Vinoth

பொன்னியின் செல்வன் திரைப்படத்தைக் குழந்தைகள் பார்க்கலாமா? வெளியான சென்ஸார் தகவல்!

பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்னும் சில தினங்களில் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது.

தமிழ் சினிமாவின் முனன்ணி இயக்குனரான மணிரத்னம் தன்னுடைய கனவுப் படமான பொன்னியின் செல்வன் படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் அமுதன்), சரத்குமார் (பழுவேட்டரையர்), பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தோட்டாதரணி கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

இந்த படம் செப்டம்பர் 30 ஆம் தேதி உலகமெங்கும் 5 மொழிகளில் ரிலீஸாக உள்ளது. படத்துக்காக தற்போது படக்குழுவினர் இந்தியா எங்கும் சுற்றி சுற்றி ப்ரமோஷன் பணிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் சென்ஸார் செய்யப்பட்டுள்ளது. படத்துக்கு யு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த படத்தை குழந்தைகள் பெற்றோர்களின் வழிகாட்டுதலோடு திரையரங்கில் பார்க்கலாம். மேலும் படத்தின் ஓடுநீளம் 2 மணிநேரம் 47 நிமிடம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. சமீபகாலமாக 2.30 மணிக்கு மேல் இருக்கும் படங்கள் ரசிகர்களின் பொறுமையை சோதித்து எதிர்மறை விமர்சனங்களைப் பெற்று வருகின்றன. ஆனால் பொன்னியின் செல்வன் பல கதாபாத்திரங்களின் கதையை சொல்லும் படம் என்பதால் இந்த நீளம் நியாயமானதுதான் என்று எடுத்துக்கொள்ளலாம்.