சிறுவர்களுக்கு இணையவழி பாலியல் மோசடி:!பெற்றோர்களே கவனம்!!
இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.அந்த ஆய்வறிக்கையில் கூறியதவாறு:
ஆன்லைனில் பெண்களைப் போன்றே பேசி பயனாளர்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வாங்கி மிரட்டும் மோசடியில் 10-16 வயதுடைய சிறுவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றன என்றும் மேலும் அவ்வாறு பாதிக்கப்படும் சிறுவர்களுக்கு பதற்றம், மன அழுத்தம்,தனது வாழ்க்கையே போய்விடுமோ என்ற பயம் போன்ற மன நோய்க்கு ஆளாவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.எனவே பெற்றோர்கள் பாலியல் மோசடிகளை குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், சிறுவர்களிடம் செல்போனை கொடுத்துவிட்டால் அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பதனை கண்காணிக்க வேண்டுமென்றும் ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.