நாளை வெகு விமர்சியாக தொடங்கவிருக்கும் தேசிகர் பிரம்மோற்சவம்:!!
கடலூரை அடுத்து உள்ள திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மற்றும் தேசிகர் பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும். தற்போது இவ்வாண்டுக்கான
பிரம்மோற்சவம் நாளை தொடக்கம். இதற்கு முன் கொடியேற்றம் நடைபெறும். இதனை தொடர்ந்து இரவு அம்ச வாகனத்தில் பவனி, அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்து காலை பல்லக்கு மற்றும் இரவு தங்க விமானம், சூரிய பிரபை, யாளி வாகனம், சந்திர பிரபை, சிம்மவாகனத்தில் பவனி போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
விழாவில் முக்கியமாக தேர்த்திருவிழா செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு புறப்பட உள்ளது. புரட்டாசி 18 ஆம் நாள் விஜயதசமி அன்று விஜயதசமி அம்பு போடுதல், கண்ணாடி பல்லக்கு வீதி புறப்பாடு நடைபெற உள்ளது. இன்று மகாளய அமாவாசை என்பதால் தேசிகர் சன்னதியில் பெருமாள், தாயார் எழுந்தருளி கண்ணாடி அறை உற்சவம் நடைபெறும், நாளை முதல் 9 நாள் வரை நவராத்திரி உற்சவம் நடைபெறும்.