மகனுக்கு மனைவியான தாய்! குழந்தைக்கு ஆசைப்பட்டு இப்படி ஒரு காரியமா!

0
221
Son's wife mother! Wanting a child is such a thing!
Son's wife mother! Wanting a child is such a thing!

மகனுக்கு மனைவியான தாய்! குழந்தைக்கு ஆசைப்பட்டு இப்படி ஒரு காரியமா!

தற்பொழுது உள்ள காலகட்டத்தில் நாம் நினைத்து கூட பார்க்க முடியாத சம்பவங்கள் நடந்து வருகின்றது.இந்நிலையில் அமெரிக்காவின் உடாஹ் பகுதியை சேர்ந்தவர் நான்சிக்கு(55).இவருடைய கணவர் ஜேசன்.இவர்களுக்கு   ஜெஃப் (32) என்ற மகன் உள்ளார்.இவருக்கு கேம்ப்ரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.இவர்களுக்கு திருமணம் ஆன நிலையில் கேம்ப்ரியா முதல் முறை கர்ப்பம் அடைந்த போதே அவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது.

அவர்களுக்கு தற்போது மூன்று வயது ஆகும் நிலையில் கேம்ப்ரியா மீண்டும் கர்ப்பம் அடைந்தார். அப்போது அவருக்கு டீசல் மற்றும் லூகா என்ற இரட்டையர்கள் பிறந்தனர்.இரண்டு பிரசவத்தின் போது இரட்டையர்கள் பிறந்ததால் கேம்ப்ரியாவின் உடல் நலம் பாதிக்கப்பட்டது.அதனால் அவருடைய கர்ப்பப்பையை அறுவை சிகிச்சை மூலம் நீக்கியுள்ளனர்.இந்நிலையில் ஜெஃப் மற்றும் கேம்ப்ரியா ஆகிய இருவருக்கும் மீண்டும் குழந்தை வேண்டும் என ஆசை ஏற்பட்டது.அதனால் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள இருவரும் முடிவு செய்தனர்.

இந்நிலையில் ஜெஃப் தாய் நான்சி அதிரடியாக முடிவு ஒன்றை எடுத்தார். அவருடைய மகன் மற்றும் மருமகள் வாடகை தாய் வைத்து குழந்தை பெற முடிவு எடுத்துள்ளது மனதிற்கு கஷ்டமாக உள்ளது அதனால் அவர்களுக்காக தானே வாடகை தாயாக மாற முடிவு செய்துள்ளார்.அந்த முடிவு குடும்பத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மேலும் அவர் என்னுடைய மகன் மற்றும் மருமகளுக்காக தான் இந்த முடிவை எடுத்துள்ளேன் எனவும் இதற்க்கு என்னுடைய கணவர் உறுதுணையாக இருகின்றார் எனவும் கூறியுள்ளார்.ஒரு தாய் மகனுக்காக இவ்வாறு செய்வது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Previous articleஇயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெப்சீரிஸ்… கதாநாயகனாக பிரபல நடிகர்!
Next articleஅனிருத்தின் தாத்தா எஸ் வி ரமணன் மரணம்… திரையுலகினர் அஞ்சலி!