இஞ்சியில் இத்தனை மருத்துவ பயன்களா? உடனடியாக நீங்களும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்!

0
118

இஞ்சியில் இத்தனை மருத்துவ பயன்களா? உடனடியாக நீங்களும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்!

சித்த மருத்துவத்தில் எப்பொழுதும் இஞ்சிக்கென ஒரு தனி இடம் உண்டு. இஞ்சியை எப்பொழுதும் தோல் நீக்கிய பிறகு பயன்படுத்த வேண்டும். இஞ்சியின் சாறு எடுத்து வெந்நீரில் கலந்து தினந்தோறும் காலையில் குடித்து வந்தால் இடுப்பில் உள்ள தேவையற்ற  சதை குறையும். இஞ்சியின் சாறை பாலில் கலந்து படித்து வந்தால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் தீரும். இஞ்சி டீ அல்லது இஞ்சி சாறு குடித்தால் பசியின்மை குணமாகும். செரிமானம் நன்றாக நடக்கும். பற்களில் வலி ஏற்பட்டால் இஞ்சியை கடித்து வலி உள்ள இடத்தில் வைத்தால் சிறிது நேரத்தில் பல் வலி பறந்தோடும்.

இஞ்சியை நன்றாக அரைத்து ஒரு பாத்திரத்தில் வைத்து சிறிது நேரம் கழித்து அதன் மேல் படிந்துள்ள நீரை எடுத்து சிறிதளவு துளசி சாறு சேர்த்து குடித்து வந்தால் வாய்வு தொல்லை நீங்கும். இஞ்சியின் சாறுடன் தேன் கலந்து குடித்து வந்தால் பித்தம் நீங்கும். ரத்தம் சுத்தமாகும். இஞ்சி சேர்க்கப்பட்டுள்ள உணவுகளை சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.