ரூ.8 ஆயிரம் விலையில் நோக்கியா அறிமுகம் செய்துள்ள 2.3 ஆண்ட்ராய்டு போன்
செல்போனை இந்தியாவில் முதல்முதலில் அறிமுகம் செய்தது நோக்கியா தான். ஆனால் அதன் பின் தொழில் போட்டிகள் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ஒதுங்கியிருந்த நோக்கியா தற்போது மீண்டும் களமிறங்கியுள்ளது.நோக்கியா – 2.3′ என்ற புதிய மாடல் ஆண்ட்ராய்டு போனை அறிமுகம் செய்துள்ள நோக்கியா, தற்போது, இந்தியாவிலும் இந்த போன் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.8199 என்ற விலையில் அறிமுகமாகியிருக்கும் இந்த மொபைல்போனில் உள்ள ஹார்டுவேர் பிரச்னைகளுக்கு, ஓராண்டுக்கு மாற்றித் தரும் வகையிலான கேரண்டி கொடுக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த போனுடன் இணைப்பாக வரும் பொருட்களுக்கு, ஆறு மாத வாரண்டியும் தரப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
6.2 இன்ச் எச்.டி., டிஸ்ப்ளே கொண்டுள்ள இந்த போனில் இரண்டு பின்புற கேமராக்கள் உள்ளன. மேலும், 4,000 எம்.ஏ.எச்., திறன் கொண்ட பேட்டரி, ‘கூகுள் அசிஸ்டென்ட்’டுக்காக பிரத்யேக பட்டன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
32 ஜி.பி ஸ்டோரேஜ் உள்ள இந்த மொபைல் போனில் மேலும் ஸ்டோரேஜ் தேவையெனில் மைக்ரோ எஸ்.டி., கார்டு மூலம், 400 ஜி.பி., வரை சேமிக்கலாம். இந்த புதிய வகை போன் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.