அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய திட்டம்! இனி ஊழியர்கள் கைப்பேசி பயன்படுத்த கூடாது மீறினால் நடவடிக்கை!
ஆந்திர பிரதேச மத்திய மின் விநியோக நிறுவனத்தின் தலைவர் பத்மா ரெட்டி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் இப்போதெல்லாம் அனைவரும் பணி நேரத்தில் பணியை முறையாக செய்யாமல் கைப்பேசி ,கணினி என பயன்படுத்தி கவனசிதறல் மற்றும் பணிநேரம் வீணாகி வருகின்றது.மேலும் தினசரி பணிகளும் பாதிப்படைகின்றது .இதனால் ஆந்திர பிரதேச அரசு முடிவு ஒன்றை எடுத்துள்ளது.
உயரதிகாரிகளைத் தவிர கணினி பயன்பாட்டாளர்கள் ,ஆவண உதவியாளர்கள் ,தட்டச்சாளர் மற்றும் தற்காலிக பணியாளர்கள் என அனைவரும் அக்டோபர் ஒன்றாம் தேதியில் இருந்து பணி நேரத்தில் கைப்பேசி பயன்டுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மதிய உணவு இடைவேளையில் மட்டுமே கைப்பேசிகளை பயன்படுத்த வேண்டும் எனவும் இதனை மீறுபவர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.