நாமக்கல் விவசாயிகளுக்கு குட் நியூஸ்!! இனி இதை ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்!
சில தினங்களுக்கு முன்பு இணையதளம் வாயிலாக பட்டா மாறுதல் செய்து கொள்ளும் வசதியை முதல்வர் தொடங்கி வைத்தார். அந்த வகையில் பரமத்தி வேளாண் உதவி இயக்குனர் கோவிந்தசாமி ஓர் அறிவிப்பு போன்ற வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகாவை சேர்ந்த விவசாயிகள் அனைவரும் இனி ஆன்லைனிலேயே பட்டா மாறுதல் குறித்து விண்ணப்பிக்கலாம். இனி ஆட்சியர் அலுவலகத்திற்கோ அல்லது இ சேவை மையத்திற்கும் போகத் தேவையில்லை.
இதற்கு முன்பெல்லாம் நிலம் எந்த இடத்தில் உள்ளதோ அந்த வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று பட்டா மாறுதல் குறித்து விண்ணப்பம் செய்யும் நிலை இருந்தது.இந்நிலையை மாற்றி தான் தமிழக முதல்வர், தமிழ் நிலம் இணைய தளத்தை தொடங்கி வைத்துள்ளார். இனி எங்கிருந்து வேண்டுமானாலும் ,நேரம் காலம் இன்றி http://tamilnilam.tn.gov.in/citizen/ என்று இணையத்திற்கு சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்த இணையத்திற்கு விடுமுறை நாட்கள் என்ற வரையறை இல்லை.
மேலும் பட்டா மாறுதலுக்கான கட்டணங்கள் அனைத்தையுமே நீங்கள் இதன் வழியே செலுத்திக் கொள்ளலாம். நீங்கள் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் அனைத்தும் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர் கீழ் செல்லும். அவர்கள் உங்கள் பட்டாவை உறுதி செய்த பின் உங்கள் நகல் அனைத்தையும் இந்த இணையத்தின் வாயிலாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இனி நீங்கள் எங்கும் அலையாமல் இருந்த இடத்தில் இருந்தே உங்களது தேவைகளை பூர்த்தி செய்யலாம் என வேளாண் உதவி இயக்குனர் கூறியுள்ளார்.இதனை உபயோகம் செய்துகொள்ளும்படி நாமக்கல் விவசாயிகளுக்கு கூறியுள்ளார்.