மீண்டும் பிட்னெஸ் பிரச்சனையில் பூம்ரா… உலகக்கோப்பையில் விளையாடுவாரா?

0
202

மீண்டும் பிட்னெஸ் பிரச்சனையில் பூம்ரா… உலகக்கோப்பையில் விளையாடுவாரா?

இந்திய அணியின் நட்சத்திர பவுலர் ஜாஸ்ப்ரீத் பூம்ரா காயம் காரணமாக கடந்த சில வாரங்களாக பிட்னெஸ் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார்.

இந்தியாவுக்கு தென் ஆப்பிரிக்கா அணி 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதல் போட்டி நேற்று திருவனந்தபுரத்தில் நடந்தது. அதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் ஜாஸ்ப்ரீத் பூம்ரா விளையாடவில்லை. அவர் முதுகுவலி பிரச்சனையால் அவதிப்படுவதாக கேப்டன் ரோஹித் ஷர்மா கூறி இருந்தார்.

தொடர்ந்து காயத்தால் அவதிப்பட்டு வரும் பூம்ரா தொடர் ஓய்வளிக்கப்படாமல் முழுவதும் குணமாகாமல் மீண்டும் அணிக்கு ஆஸ்திரேலியா தொடரில் அழைக்கப்பட்டார். ஆனால் அவர் அந்த தொடரில் சிறப்பாக பந்துவீசவில்லை. இப்போது மறுபடியும் காயம் என்று அவர் உட்காரவைக்கப்பட்டுள்ளார். இதனால் அவரின் உடல்தகுதியில் குழப்பமான சூழல் நிலவுகிறது. இதனால் அவர் முழு தகுதியோடு உலகக்கோப்பை தொடரில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே இந்திய அணியின் பந்துவீச்சு பலவீனமானதாகவும், குழப்பமானதாகவும் உள்ளது. இந்நிலையில் பூம்ராவின் உடல்தகுதி புதிய பிரச்சனையாக எழுந்துள்ளது. ஆல்ரவுண்டர் ஜடேஜாவும் காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ள நிலையில் உலகக்கோப்பை தொடரில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தொடர்ந்து முன்னணி வீரர்களின் பிட்னெஸ் பிரச்சனைகள் பிசிசிஐக்கு தலைவலியாக அமைந்துள்ளது.

Previous articleமீண்டும் தரவரிசையில் முன்னேற்றம் அடைந்த சூர்யகுமார் யாதவ்!
Next articleநாமக்கல் விவசாயிகளுக்கு குட் நியூஸ்!! இனி இதை ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here