போலி ஆவணம் மூலம் நில மோசடி சார்பதிவாளர் கைது! போலீசார் வழக்கு பதிவு!

0
146
Land fraud agent arrested with fake document! Police registered a case!
Land fraud agent arrested with fake document! Police registered a case!

போலி ஆவணம் மூலம் நில மோசடி சார்பதிவாளர் கைது! போலீசார் வழக்கு பதிவு!

மதுரையை சேர்ந்தவர் கருமுத்து தியாகராஜ செட்டியார். இவருடைய மகள் லலிதா.இவர் தென்காசி மாவட்ட நில அபகரிப்பு தடுப்புபிரிவு போலீசார்ரிடம் புகார் அளித்தார்.அந்த புகாரில் ஆயிரப்பேரியில் எனக்கு சொந்தமாக முக்கால் ஏக்கர் நிலத்தை போலியான ஆவணங்கள் தயாரித்து தென்காசி சார்பதிவாளர் எண் 1 அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறியிருந்தார்.

அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.அந்த விசாரணையில் அவர்கள் போலி ஆவணங்கள் தயாரித்து நில மோசடி செய்தது தெரியவந்தது.அதனையடுத்து சார்பதிவாளர் மணி ,நிலத்தை எழுதி வாங்கிய சோமசுந்தர பாரதி ,சாட்சி கையெழுத்திட்ட வடிவேல் தனசீலன் ஆகிய நான்கு நபர்களை கைது செய்தனர்.மேலும் இதற்கு உடந்தையாக இருந்த தென்காசியை சேர்ந்த முகமது ரபிக் சுரண்டையை சேர்ந்த பவுன்ராஜ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Previous articleதமிழகத்தில் இன்று 8க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை!
Next articleசென்னையில் இதுக்கு இன்றே கடைசி நாள்! தவற விடாதீர்கள்