பெயரை கேட்டால் ரங்கா – பில்லா என கூறுங்கள்; என்று கூறிய அருந்ததி ராய் மீது போலீசில் புகார்.

0
142

அசாம்  தவிர மற்ற மாநிலங்களில் தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

 இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த எழுத்தாளர் அருந்ததி ராய் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் பேசும் போது கூறியதாவது  “தேசிய குடிமக்கள் பதிவேட்டின்முன்னோட்டமாக, தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பு  நடத்தப்படவுள்ளது. இதில் திரட்டப்படும் தகவல்கள் மூலம் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படும். மத்திய அரசு முஸ்லிம்களுக்கு எதிராக காய் நகர்த்தி வருகிறது. எனவே மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்புக்காக வரும்போது உங்கள் பெயர் முகவரிகளை மாற்றி கொடுங்கள், உதாரணமாக பெயரைக்கேட்டால் “ரங்கா -பில்லா” என்று கூறுங்கள், முகவரியை கேட்டால் “எண் 7, ரேஸ் கோர்ஸ் சாலை – டெல்லி, என்று பிரதமிரின் முகவரியை கூறுங்கள்” இவ்வாறு பேசியிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் ராஜீவ் குமார் ரஞ்சன், அருந்ததி ராய் மீது புகார் அளித்துள்ளார். அதில் “தேசத்தின் நலனுக்கு எதிராக அருந்ததி ராய் பேசியுள்ளதாகவும் இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய தண்டனை வழங்க வேண்டும், அப்போதுதான் அவர் மீண்டும் அவதூறாக பேச மாட்டார் ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleதுக்கடா கட்சிகளுக்கு தக்க பாடம் கற்பிக்கப்படும்; அமித் ஷா
Next articleஜப்பானில் 100 ஆண்டுகளில் இல்லாத பிறப்பு விகித வீழ்ச்சி: அரசு அதிர்ச்சி