அன்புமணி மீது அவதூறு செய்தி வெளியிட்டது இதை மறைக்க தானா? பிரபல செய்தி நிறுவனத்தின் மெகா மோசடி
சமீபத்தில் பாமகவை சர்ச்சைக்கு உள்ளாக்கிய விவகாரமான மாநிலங்களவை உறுப்பினராக உள்ள அன்புமணி ராமதாஸ் அவர்கள் வருகைப் பதிவு குறைவாக உள்ளதாகவும், மேலும் அவர் எந்த கேள்வியையும் எழுப்பவில்லை என்றும் டைம்ஸ் ஆப் இந்தியா என்ற பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. இதை திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்தவர்களும், திமுக ஆதரவு பெற்ற ஊடகங்களும் வேகமாக பரப்பி வந்தன.
இதனையடுத்து அது பொய்யான செய்தி என பாமக நிர்வாகிகள் அந்த பத்திரிக்கை அலுவலகத்திற்கு சென்று விளக்கம் அளித்த பிறகு அதற்கு மறுப்பு தெரிவித்து உண்மையான செய்தியான அவர் மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விகள் மற்றும் அதற்கு அளித்த பதில்கள் பற்றியும் வெளியிட்டது.
இதன் பின்னணியில் திமுக செயல்பட்டதாக விமர்சனம் எழுந்துள்ள நிலையில், டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்தின் மீதே மேலும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதை உறுதி செய்யும் வகையில் ரூ.625 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனம் மீது சுப்ரமணிய சுவாமி குற்றசாட்டு கூறியுள்ளார்.
“டைம்ஸ் ஆப் இந்தியா குழுமம்” பல போலி நிறுவனங்கள் மூலம் பல்வேறு பண மோசடி மற்றும் வரி ஏய்ப்பு நடிவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக மனு ஒன்றை சுப்ரமணிய சுவாமி தாக்கல் செய்துள்ளார். பிரதமர் மோடி மற்றும் சில ஏஜென்ஸிகளுக்கு சுவாமி அனுப்பியிருக்கும் மனுவில் தெரிவித்திருப்பதாவது.
“இந்தியாவின் மிகப்பெரிய ஊடக நிறுவனமான டைம்ஸ் ஆப் இந்தியா குழுமத்தின் பெரும்பாண்மை பங்குதாரர்களான சமீர் ஜெயின்,வினீத் ஜெயின் மற்றும் அவர்களது தாயார் இந்து ஜெயின் ஆகியோர் பல்வேறு நிறுவனங்களை சட்டவிரோதமாக நிறுவியதாகவும், மேலும் பிற பங்குதாரர்களிடமிருந்து ரகசியமாக பங்குகளை வாங்கியதன் மூலம் பெரும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
26 பக்கங்கள் கொண்ட அவரது மனுவில், சட்டவிரோதமான நிறுவனங்கள் மூலம் நிகழ்ந்துள்ள வரி ஏய்ப்பு மற்றும் பண மோசடிகளுக்கு கையாளப்பட்ட ரகசிய வழிமுறைகள் குறித்து விளக்கமாக குறிப்பிட்டுள்ளார். இந்த மிகப்பெறிய ஊழல் குறித்து விசாரிக்க, வருமான வரித்துறை, சி.பி.ஐ, இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்(SEBI), உள்ளிட்ட அமைப்புகளுக்கு ஆணையிட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
டைம்ஸ் ஆப் இந்தியா குழுமத்தின் “பென்னட் அண்ட் கோல்மேன்” நிறுவனம் , பாரத் நிதி லிமிடெட், பி.என்.பி பைனான்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், அசோகா மார்க்கெட்டிங் லிமிடெட், உள்ளிட்ட 8 சட்டவிரோதமான நிறுவனங்கள் மூலம் நிர்வகிக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
SEBI’யின் கட்டுப்பாடுகளை மீறி பாரத் நிதி லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளை திரும்பப்பெற்றதின் மூலம் ரூ.625 கோடி ருபாய் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாகவும், மேலும் ஜெயின் குடும்பம் ஈடுபட்டுள்ள, வரி ஏய்ப்பு மற்றும் பண மோசடியின் மதிப்பு சுமார் 1000 கோடி இருக்க கூடும் என்று சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் பாதிப்புக்குள்ளான 300’க்கும் மேற்பட்ட பங்குதார்கள் செபி(SEBI) மற்றும் டெல்லி நீதிமன்றத்தை அணுகியிருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தங்கள் நிறுவனம் செய்த இந்த மெகா வரி ஏய்ப்பு முறைகேட்டை மறைக்க தான் அன்புமணி ராமதாஸ் பற்றி பொய்யான செய்தியை வெளியிட்டு திசை திருப்ப முயற்சித்ததாகவும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.