திடீரென்று மாயமான சிறுமி!! போலீஸ்க்கு துப்பு சொன்ன இன்ஸ்டாகிராம்!!
சென்னை சூளைமேட்டில் தனியார் விடுதி ஒன்றில் சிறுமி ஒருவர் தங்கி வந்துள்ளார். இவர் சினிமா வசனங்களுக்கு ரீல்ஸ் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது வழக்கமாக வைத்துள்ளார். இவருக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடல் நலக்குறைவால் இச்சிறுமியை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் விடுதி நிர்வாகி சேர்த்துள்ளனர். சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த சிறுமி திடீரென்று காணாமல் போய்விட்டார். அதிர்ச்சி அடைந்த விடுதி நிர்வாகி, இது குறித்து காவல் நிலத்தில் புகார் அளித்தார். புகார் அளித்ததன் பேரில் போலீசார் அச்சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர்.
அவ்வாறு தேடி வந்த நிலையில் காணாமல் போன சிறுமி இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமான மற்றொரு பெண்ணுடன் இருப்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்வதற்காக எண்ணூர் சுனாமி குடியிருப்பில் இருந்து வந்துள்ளனர். காணாமல் போன சிறுமி, பிரபலமாக இருக்கும் பெண்ணுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு வெளியிட்டதன் மூலம் இதனை போலீசார் கண்டுபிடித்தனர். அச்சிறுமியை மீட்டு அறிவுரை கூறி போலீசார் அவர் தந்தையிடம் சேர்த்தனர். இன்ஸ்டாகிராமில் பிரபலமான பெண்ணுடன் சேர்ந்து வீடியோ செய்வதற்காகவே இப்பெண் மருத்துவமனையை விட்டு வெளியேறியுள்ளார்.