எடப்பாடியார் கொண்டு வந்த திட்டத்தை திமுக அரசு செயல்படுத்துமா அல்லது கிடப்பில் போடுமா? முதல்வரை சீண்டும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர்!

0
151

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கு தமிழக அரசு மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் வலியுறுத்தியுள்ளார். மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றிட மத்திய அரசு 550 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.

அந்த விமான நிலைய விரிவாக்கத்திற்கு 633.17 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதில் எடப்பாடி யார் தலைமையிலான அம்மாவின் ஆட்சியில் அயன் பாப்பாக்குடி, குசவன் குண்டு, பாப்பானோடை, ராமன் குளம், போன்ற பகுதிகளில் பட்டா நிலங்கள் அரசு புறம்போக்கு நிலங்கள் என்று 528.65 ஏக்கர் நிலங்களை முழுமையாக ஒப்படைக்கப்பட்டது.

அதிலும் குறிப்பாக 90% அளவில் இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 104.52 ஏக்கர் நிலங்களை திமுக அரசு துரிதப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நோய் தொற்று காலகட்டத்தில் நிலம் எடுக்கும் பணி தாமதமானது.

தற்சமயம் சகஜமான நிலை திரும்பி விட்ட நிலையில் மத்திய அரசுக்கு எதிர் பார்க்கும் வகையில் திமுக அரசு ஒத்துழைப்பு வழங்க முன் வர வேண்டும். சென்னையில் புதிதாக ஏற்படுத்தப்படும் விமான நிலையத்திற்கு காட்டும் அக்கறை மதுரை விமான நிலையத்திற்கும் காட்டப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் ஆர் பி உதயகுமார்.

மதுரை மாவட்டம் தொழில் வளர்ச்சியில் பின் தங்கிய மாவட்டமாக இருக்கிறது. இந்த புதிய பன்னாட்டு விமான நிலையத்தின் மூலமாக தொழில் வளர்ச்சி, விவசாய வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, கல்வி வளர்ச்சி உள்ளிட்டவை ஏற்படும்.

ஏற்கனவே சர்வதேச விமான நிலையம் ஏற்படுத்துவதற்கு ரிங் ரோடு பகுதியில் 500 மீட்டர் முதல் 1000 மீட்டர் வரையில் இருக்கின்ற தேவையாகும். அப்படி அந்த விமான நிலையத்தை எடுக்கும் பட்சத்தில் வாகனங்கள் 9 கிலோமீட்டர் சுற்றி செல்லும் சூழ்நிலை ஏற்படும். ஆகவே அண்டர் பாஸ் திட்டத்தை செயல்படுத்தினோம்.

இதற்காக எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக் காலத்தில் என்ஓசி வழங்கப்பட்டது. அண்டர் பாஸ் திட்டம் மைசூர், வாரணாசியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் முதல்முறையாக மதுரையில் செயல்பட உள்ளது.

எனவே மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்திட எடப்பாடி யார் தலைமையிலான அம்மா அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை திமுக அரசு விரிவுபடுத்துமா? கிடப்பில் போடுமா? என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி உதயகுமார் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

Previous article60 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி:!! அத்துமீறி சிறப்பு வகுப்பு நடத்தியதில் ஏற்பட்ட விபரீதம்!!
Next articleபெரியார் பிறந்த மண்ணில் ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கத்தை நாம் அனுமதிக்கலாமா? ஆர் எஸ் எஸ் அமைப்பை பார்த்து கதறும் திருமாவளவன்!