இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டு உலக கோப்பையை சிறப்பாக ஆடியது எனினும் அரைஇறுதி ஆட்டத்தில் எதிர்பாராத விதமாக ஏமாற்றம் அடைந்து நியூஸிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது.
அந்த தோல்வியை தவிர இந்திய அணிக்கு ஏறுமுகம் தான் எல்லா தொடர்களிலும் குறிப்பிட்ட வெற்றிகளை குவித்தது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது கோலி தலைமையிலான படை.
இதனிடையே 2020-ம் ஆண்டுக்கான சுற்றுப் பயண விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.
முதலாவதாக இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஜனவரி 5-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
ஆஸ்திரேலியா இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஜனவரி 14-ந்தேதி முதல் ஜனவரி 19-ந்தேதி வரை மூன்று ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடும்.
அதன்பின் இந்திய நியூஸிலாந்து செல்கிறது ஜனவரி 24-ந்தேதி முதல் மார்ச் 4-ந்தேதி வரை நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்கிறது. இதில் ஐந்து டி20, 3 ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
அதன்பின் தென்ஆப்பிரிக்கா இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. மார்ச் 12-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை செய்து மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
அதன்பிறகு சிறப்புமிக்க மார்ச் 28-ந்தேதி முதல் மே 24-ந்தேதி வரை IPL கிரிக்கெட் தொடர் நடக்கிறது.
ஜூலை மாதம் இந்திய அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து தலா மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் வரை இங்கிலாந்து அணி இந்தியா வருகிறது. இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விளையாடுகிறது.
அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து டி20 தொடரில் விளையாடுகிறது. அதன்பின் அக்டோபர் – நவம்பர் மாதங்களில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரில் விளையாடுகிறது.
அதன்பின் டிசம்பர் மாதம் முதல் 2021 ஜனவரி வரை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடும். என தெறிக்கவிக்கப்பட்டுள்ளது.