விமானத்தைத் தவறவிட்டதால் டி 20 உலகக்கோப்பையில் இருந்து நீக்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர்!
வெஸ்ட் இண்டீஸ் அணி உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலியாவில் டி 20 தொடரில் விளையாட உள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் ஷிம்ரோன் ஹெட்மயர், ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் ” விமானத்தைத் தவறவிட்டதால், அவர் ஆடவர் டி20 உலகக் கோப்பை அணியில் இருந்து நீக்கப்படுவதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்வுக் குழுவால் “ஒருமனதாக” முடிவு எடுக்கப்பட்டதாக CWI கூறியது, ஹெட்மையருக்குப் பதிலாக ஷமர் ப்ரூக்ஸை தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது.
சனிக்கிழமையன்று கரிபீயன் கிரிக்கெட் லீக் முடிவடைந்ததைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர்கள் வெவ்வேறு குழுக்களாக ஆஸ்திரேலியாவுக்கு விமானம் மூலம் சென்றனர். ஆனால் உலகக்கோப்பை தொடர் மற்றும் அதற்கு முன்பாக நடக்க இருந்த ஆஸ்திரேலியா தொடருக்கு தேர்வாகி இருந்த ஷிம்ரான் ஹெட்மெய்ர் தனது குடும்ப சூழல் காரணமாக தன்னுடைய பயணத்தை மாற்றிக் கொடுக்குமாறு கேட்டிருந்தார்.
அதையடுத்து அவருக்கு சனிக்கிழமையில் இருந்து திங்கள் கிழமைக்கு நியுயார்க் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது. ஆனால் அவர் அந்த விமானத்தைப் பிடிக்க சரியான நேரத்தில் விமான நிலையத்தை அடையவில்லை என தெரிகிறது. இதனால் கிரிக்கெட் வாரியம் இந்த அதிரடியான முடிவை எடுத்துள்ளது.
இது குறித்து பேசியுள்ள வெஸ் இண்டீஸ் அணி கேப்டன் நிக்கோலஸ் பூரன், ” இது கண்டிப்பாக இழப்புதான். நாங்கள் அவருக்காக சில திட்டங்களை வைத்திருந்தோம். உண்மையாகச் சொல்வதானால், தற்போது எனது கவனம் இதிலில்லை. ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது, உங்கள் செயலுக்கான விளைவுகள் கண்டிப்பாக இருக்கும்.” எனக் கூறியுள்ளார்.