மீண்டும் வந்துவிட்டாரா நித்தியானந்தா:? ஆசிரமம் இடிப்பு!! பல்லடம் அருகே பெரும் பரபரப்பு!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நித்தியானந்தா என்று நினைத்து,சாமியார் ஒருவரின் ஆசிரமத்தை பொக்லைன் இந்திரன் மூலம் முழுவதுமாக இடித்து தரமட்டமாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் பாஸ்கரானந்தா என்னும் சாமியார்.இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரணம்பேட்டையில் ஆசிரமம் அமைக்க திட்டமிட்டு இருந்தார்.இதற்காக கடந்த 2018 ஆம் ஆண்டு செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான இடத்தை ரூபாய் 1.5 கோடி கொடுத்து வாங்கியுள்ளார்.
கொரோனா பரவல்காரணமாக கட்டிட பணி தாமதமாக நடைபெற்ற நிலையில் தற்போது அந்த கட்டிடப் பணி முழுவதுமாக முடியும் நிலையில் உள்ளது.
இந்நிலையில் கடந்த வாரம் ஆசிரமத்தின் அறையில் இருந்த 25 சவரன் தங்க நகைகள் காணாமல் போனதாக பாஸ்கரானந்தா பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
தற்போது அவர் வெளியூர் சென்று இருந்த நிலையில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அந்த ஆசிரமத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் முழுவதுமாக இடித்துள்ளனர்.
இந்த செய்தியினை அறிந்த பாஸ்கரானந்தா நேற்று பல்லடம் சென்று இதைக் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.முன்னறிவிப்பு எதுவும் இன்றி மர்ம நம்பர்கள் ஆசிரமத்தை இடித்ததாக அவர் புகாரில் தெரிவித்திருந்தார். மேலும் அவர் தான் நித்தியானந்தாவை போல தோற்றம் அளிப்பதால் மர்ம நபர்கள் தனது ஆசிரமத்தை இடித்திருக்கலாம் என சந்தேகப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நித்தியானந்தாவை போல் பாஸ்கர் ஆனந்தா தோற்றம் அளிப்பதால் ஆசிரமம் இடிக்கப்பட்டதாக சொல்லப்படுவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.