அருண்மொழிவர்ம ராஜ ராஜ சோழன் தமிழில் வெளியிட்ட அரிய தங்க நாணயம்!

0
172

பொன்னியின் செல்வன் என்ற சோழர்கள் வரலாறு தெரிவிக்கும் மாடல் திரைப்படமாக எடுக்கப்பட்ட நாள் முதல் சோழர்களின் வரலாறு தொடர்பான தேடல் அதிகரித்து இருக்கின்ற நிலையில், ராஜராஜ சோழன் வெளியிட்ட அரிய வகை தமிழ் நாணயம் கிடைத்திருக்கிறது, சோழர்களின் வரலாற்றில் இது ஒரு முக்கிய விருப்பமாக பார்க்கப்படுகிறது.

சோழ மன்னர்களில் மிகவும் வலிமையானவராகவும் கிழக்கு ஆசிய நாடுகளையும், வட மாநிலங்களையும், வெற்றி பெற்ற பேரரசனாகவும் விளங்கி வந்தவர் ராஜராஜன் என்று சொல்லப்படும் அருண்மொழிவர்மன்.

அவர் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டிய தஞ்சை பெரிய கோவில் போன்ற பல்வேறு கோவில்கள் சோழர்களின் கட்டிடக்கலைக்கு சான்றுகளாக நிற்கின்றன. ராஜராஜ சோழனின் காலத்தில் பல்வேறு பட்ட பெயர்கள் உள்ளித்துவற்றில் தங்கம், வெள்ளி, செம்பு, உள்ளிட்ட காசுகள் வெளியிடப்பட்டுள்ளனர்.

அவற்றில் நாகரி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளனர். ராஜராஜ சோழன் முதன் முதலில் ஓர் வெற்றியை பெற்றதை குறிக்கும் விதத்தில் சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டதும் அதில் தமிழிலேயே எழுத்துக்கள் பொறித்ததற்கும் ஆதாரமாக தங்க நாணயம் ஒன்று கிடைத்திருக்கிறது.

நாணயவியல் ஆய்வாளர் ஆறுமுக சீதாராமன் தெரிவித்ததாவது, மும்பை ஒஸ்வால் ஏல நிறுவனம் ஏலம் விடுவதாக ஒரு தங்க நாணயத்தின் புகைப்படத்தை வெளியிட்டது. அந்த நாணயம் சாளுக்கிய சோழரான முதலாம் குலோத்துங்கனால் வெளியிடப்பட்டது. அதன் முன்பக்கத்தில் நின்ற நிலையில் மயிலும் பின்பக்கத்தில் தமிழ் எழுத்தில் அவனை முழுதுடையான் என்ற வாசகம் காணப்படுகிறது என்று கூறி ஏலம் விட்டது.

அந்த ஏல நிறுவனம் வெளியிட்ட தகவல் சரியானதுதானா என்பதை உறுதிப்படுத்துமாறு சென்னையைச் சார்ந்த சங்கரன் ராமன், திருவனந்தபுரத்தைச் சார்ந்த பீணா சரசன், மும்பையைச் சார்ந்த க்ரிஷ் வீரா உள்ளிட்டோர் நாணயத்தின் புகைப்படத்தை எனக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த ஏல நிறுவனம் தெரிவித்த தகவல்கள் இதுவும் அதில் காணப்படவில்லை அதற்கு மாறாக நாணயத்தின் முன் புறத்தில் வலது பக்கம் நோக்கி நிற்கும் சேவல் உள்ளது.

சேவலின் முன்பு ம என்ற தமிழ் எழுத்து இருக்கிறது. நாணயத்தின் பின்புறத்தில் ரத்த வடிவில் கெரளந்தகன் என பதினோராம் நூற்றாண்டின் சோழர் கால தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளனர். இந்த நாணயத்தின் எடை 0.26 கிராம் என்று சொல்லப்படுகிறது.

ராஜராஜ சோழன் தான் மன்னனாக முடிசூடிய நான்காம் வருடத்தின் தொடக்கத்தில் காந்தளூர் சாலை காலம் வரும் தருக கோராஜ கேசரி வர்மன் என்று தன்னை தெரிவித்துக் கொள்கின்றான். அதோடு தன் மெய்க்கீர்த்தியிலும் இந்த பெயரையே முதலில் குறிப்பிட்டார்.

அதாவது ராஜராஜ சோழன் என்னும் அருண்மொழிவர்மன் கிபி 988 இல் கேரளாவின் திருவனந்தபுரம் அருகில் இருக்கின்ற காந்தளூர் சாலையை வென்றுள்ளான். ராஜராஜ சோழன் சேர நாட்டிற்கு செல்ல பாண்டிய நாட்டை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது. அப்போது பாண்டியன் அமரபுயங்கன், ராஜராஜ சோழன் உடன் போரிட்டான் அவனையும் ராஜ ராஜ சோழன் வெற்றி கொண்டார்.

இது மாமன்னன் அருண்மொழிவர்ம ராஜராஜ சோழன் தானே தலைமையேற்றுச் சென்று வெற்றி பெற்ற பெரும் போராக இருக்கிறது. கேரள மன்னனை வெற்றி பெற்றதால் ராஜராஜ சோழன் கேரளந்தகன் என்ற சிறப்பு பட்டத்தை சூடிக்கொண்டான். இந்த பட்டப் பெயரில் கேரளன் என்பது சேரணையும், அந்தகன் என்பது எமனையும் குறிக்கும்.

தன்னுடைய வரலாற்றின் முதல் வெற்றியை ருசித்து, அதனால் கிடைத்த பட்டத்தை வரலாற்றில் நிலை நிறுத்தும் வகையில் தான் தங்கத்தால் ஆன சிறப்பு நாணயத்தை வெளியிட்டுள்ளார் ராஜராஜ சோழன்.

அதில் முழுக்க, முழுக்க தன்னுடைய தாய் மொழியான தமிழ் எழுத்துக்களை பொறித்துள்ளான். இதுதான் அருண்மொழிவர்ம ராஜராஜ சோழன் வெளியிட்டுள்ள தமிழ் நாணயத்துக்கான சான்றிதழாகவும் சோழர்களின் நாணய வரலாற்றுக்கான அரிய சான்றாகவும் இருக்கிறது.

Previous article“தினேஷ் கார்த்திக் & ரிஷப் பண்ட் பேட்டிங் வரிசையை மாற்றியது ஏன்?” பயிற்சியாளர் டிராவிட் விளக்கம்
Next articleதென் மாவட்டங்கள் அதிமுகவின் கோட்டை என்பதில் ஐயமில்லை! நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகிறாரா எடப்பாடி பழனிச்சாமி?