Breaking News, Cinema

பாங்காங்கில் பரபர ஷூட்டிங்… துணிவு ஷூட்டிங் எப்போது முடியும்?

Photo of author

By Vinoth

பாங்காங்கில் பரபர ஷூட்டிங்… துணிவு ஷூட்டிங் எப்போது முடியும்?

அஜித்தின் துணிவு படத்தின் ஷூட்டிங் தாய்லாந்து நாட்டின் பாங்காங்கில் நடக்கிறது.

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக  இணைந்துள்ள இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘AK 61’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. படத்தில் மஞ்சு வாரியர் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து படத்தின் தலைப்பு உள்ளிட்ட எந்தவொரு அப்டேட்டும் வெளியாக வில்லை. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியானது. மேலும் படத்தின் டைட்டில் ‘துணிவு’ என்று அறிவிக்கப்பட்டது. சமீபகாலமாக அஜித்தின் பட பெயர்கள் வீரம், விவேகம், வலிமை என வைக்கப்பட்டு வரும் நிலையில் கிட்டத்தட்ட அதே பொருள் கொண்ட துணிவு என்ற டைட்டில் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.

இந்நிலையில் படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் தாய்லாந்து நாட்டின் பாங்காங்கில் நடக்கிறது. அங்கு ஒரு ஆக்‌ஷன் சீக்வென்ஸை இயக்குனர் ஹெச் வினோத் படமாக்கி வருகிறார். இந்நிலையில் அக்டோபர் 12 ஆம் தேதியோடு மொத்த ஷூட்டிங்கும் முடிய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதோடு படத்தின் மொத்த ஷூட்டிங்கும் முடிவதாகவு தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படம் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினார் தமிழக ஆளுநர்! அதிரடியில் இறங்கிய தமிழக அரசு!

விரைவில் அறிமுகமாகும் புதிய செயலி! இந்த நோய் தொற்று  அனைத்தையும் நொடியில் அறிந்து கொள்ளாலாம்!

Leave a Comment