ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினார் தமிழக ஆளுநர்! அதிரடியில் இறங்கிய தமிழக அரசு!

0
103

தமிழகத்தில் இணையதள சூதாட்ட தடைச் சட்டம் மற்றும் இணையதள விளையாட்டுகள் ஒழுங்குமுறை சட்டத்திற்கு ஆளுநர் ஆர் என் ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து எதிர்வரும் கூட்டத் தொடரிலேயே அவசர சட்டம் இயற்றப்பட உள்ளது சட்டம் இயற்றப்பட்ட பிறகு தமிழகத்திற்குள் எந்த ஒரு நபரும் இணையதள சூதாட்டத்தில் ஈடுபட முடியாதவாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

செல்போன் எண்ணின் இருப்பிடத்தின் அடிப்படையில் மாநிலத்துக்குள் இணையதள சூதாட்டத்திற்கு தடை, இணையதள சூதாட்டம் குறித்த விளம்பரங்களுக்கு தடை, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த ஒரு ஊடகங்களிலும் செயலிகளிலும் இணையதள சூதாட்டம் தொடர்பான விளம்பரம் வெளியிடுவதற்கு தடை உள்ளிட்டவை நடைமுறைக்கு வந்துவிடும். இனிவரும் காலங்களில் இணையதள விளையாட்டை நடத்துவோர் மீது அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்டனை விவரங்கள்

இணையதள சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு 3 மாத கால சிறை அல்லது 5000 ரூபாய் அல்லது இரண்டுமே தண்டனையாக வழங்கப்படும். சூதாட்ட விளம்பரங்களை வெளியிடுவதற்கு 5 லட்சம் ரூபாய் வரையில் அபராதம் அல்லது 1 வருடத்திற்கு சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக வழங்கப்படும்.

சூதாட்டத்தை நடத்தும் நிறுவனம் அல்லது நபர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரையில் அபராதம் அல்லது 3 ஆண்டுகால சிறை தண்டனை அல்லது இரண்டுமே தண்டனையாக வழங்கப்படும். 2வது முறை தவறிழைக்கும் நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு முந்தைய தண்டனையை விட இரட்டிப்பாக தண்டனை வழங்கப்படும்.

ஆணையத்தால் விதிக்கப்படும் தண்டனைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.