உங்களுக்கு ஏதேனும் அரசு வழங்கும் மருந்து குறித்து புகாரா?? உடனடியாக இந்த எண்ணை அழையுங்கள்!! தமிழக அரசு வெளியிட்ட புதிய தகவல்!!

0
158
Do you have a complaint about any government-supplied medicine?? Call this number immediately!! New information released by Tamil Nadu government!!
Do you have a complaint about any government-supplied medicine?? Call this number immediately!! New information released by Tamil Nadu government!!

உங்களுக்கு ஏதேனும் அரசு வழங்கும் மருந்து குறித்து புகாரா?? உடனடியாக இந்த எண்ணை அழையுங்கள்!! தமிழக அரசு வெளியிட்ட புதிய தகவல்!!

தமிழக முழுவதும் தற்பொழுது இன்ஃப்ளுன்சா காய்ச்சல் பரவி வருகிறது.இதனால் மக்கள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மக்களுக்கு போதுமான மருந்து மாத்திரைகள் இல்லை என ஆங்காங்கே புகார்கள் எழுந்து வருகிறது. போதுமான அளவு மருந்து மாத்திரைகள் இருக்கின்றது என சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கினாலும், அதன் தட்டுப்பாடுகள் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் போதை இல்லா தமிழ் நாட்டை உருவாக்குவோம் என்ற விழிப்பபுணர்வு மாரத்தான்  நடைபெற்றது. இந்த மாரத்தானை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

தொடங்கி வைத்ததோடு அங்குள்ள செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கஞ்சா விற்பனை குறைந்துள்ளதாக தெரிவித்தார்.தற்பொழுது வரை 169 டன் பான்பராக் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதர மாநிலங்களில் இருந்து கடத்தப்பட்டு வரும் கஞ்சாவையும் கைப்பற்றுவதாக தெரிவித்தார். அங்கிருந்த பத்திரிகையாளர்கள், மருந்து தட்டுப்பாடு குறித்து கேள்வி எழுப்பினர். அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில், தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு என்பதே இல்லை. அதனை பேசும் பொருளாக உருவாக்க நினைக்கின்றனர்.

இவ்வாறு வசை போடுபவர்கள் யார் வேண்டுமானாலும் தமிழ்நாட்டில் உள்ள 32 கிடங்குகளில் சோதனை செய்து கொள்ளட்டும்.தற்போது வரை எந்த அளவில் மருந்து உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்,அதற்கான வசதிகளும் உள்ளது என கூறினார். யாரேனும் மருந்து தட்டுப்பாடு குறித்து புகார் அளிக்க வேண்டும் என்றால் 104 என்ற எண்ணை அழைக்கலாம். அவர்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்

Previous articleரயில் தண்டவாளத்தில் கிடந்த பிணம்! அதிர்ச்சியில் கிராம மக்கள்!
Next articleபொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ரிலீஸ் தேதி இதுதான்… வெளியான தகவல்!