தமிழகத்தில் நிலவிவரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி! அடுத்து வரும் 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் தகவல்!

0
183

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது தமிழகத்தின் வட மாவட்டங்களில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது ஆகவே தமிழ்நாடு மற்றும் புதுவையில் வரும் 14ஆம் தேதி வரையில் மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதேபோல தலைநகர் சென்னையில் இன்று ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை போன்ற பகுதிகளில் நாளை கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் நாளை மறுநாள் கன மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை நிலவரப்படி 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் லக்கூரில் 14 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஇலங்கை வாழ்த்தமிழர்களுக்கு ஆர் எஸ் எஸ் தொண்டு நிறுவனம் செய்த உதவி!
Next articleதொடர் கனமழையால் இந்த மாவட்டத்திற்கு இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here