இலங்கை வாழ்த்தமிழர்களுக்கு ஆர் எஸ் எஸ் தொண்டு நிறுவனம் செய்த உதவி!

0
108

பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்ட இலங்கையில் பத்தாயிரம் குடும்பங்களுக்கு ஆர்எஸ்எஸ் தொண்டு அமைப்பான சேவா இன்டர்நேஷனல் அரிசி போன்ற உணவுப் பொருட்களை வழங்கி உள்ளது.

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட இலங்கை கடந்த 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு பொருளாதாரத்தில் மெல்ல, மெல்ல மீண்டு வந்தது.

ஆனால் கடந்த 2020 ஆம் ஆண்டு நோய் தொற்று பாதிப்புகள் காரணமாக அந்த நாட்டின் நிலைமை மிகவும் மோசமானது. அத்யாவசிய உணவுப் பொருட்களின் விலை நடுத்தர மக்களால் கூட வாங்க முடியாத அளவுக்கு அதிகரித்ததால் அதிபர் மாளிகைகள் நுழைந்து மக்கள் சூறையாடும் அளவுக்கு நிலைமை மோசமானது.

அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், மஞ்சள் தூள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்தது. ஆகவே நுவரெலியா, கண்டி போன்ற பல்வேறு மாவட்டங்களில் தேயிலை ஸ்டேட்டுகளில் பணி புரியும் தமிழக குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதேபோல சிங்கள குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்கள் மற்றும் சிங்களர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆர்எஸ்எஸ் தொண்டு அமைப்பான சேவா இன்டர்நேஷனல் உணவு, மருந்து பொருட்களை வழங்கி வருகிறது.

இது தொடர்பாக அந்த அமைப்பின் நிர்வாகி விஜயபாலன் தெரிவித்ததாவது,நுவரெலியா,கண்டி,ரத்னபுரா,பதுல்லா,மட்டாரா,காலே, மன்னார் போன்ற மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட ஒரு லட்சம் குடும்பங்களை எங்களுடைய தன்னார்வலர்கள் மூலமாக அடையாளம் கண்டு கடந்த ஏப்ரல் மாதம் முதல் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

தற்போது கணவரை இழந்து பெண்களை மட்டுமே நம்பியுள்ள குடும்பங்களுக்கு ஆறுமுக நாவலர் அறக் கட்டளையுடன் ஒன்றிணைந்து உதவிகளை வழங்கி வருகிறோம்.

அதன் முதல் கட்டமாக நோட்டன் பிரிட்ஜ், வட்டவலை, புலியாவத்தை, கினிகத் தேனை, பத்தனை, கொட்டைகளை, டிக்கோயா,அளுந்தகம்,காமினிபுர,பொன்னகர்,பண்மூர்,பண்டார நாயக டவுன், வில்பிரட் டவுன் போன்ற பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 ஆயிரம் குடும்பங்களுக்கு 1 மாதத்திற்கு தேவையான 25 கிலோ அரிசி, 25 கிலோ மாவு உள்ளிட்டவை இந்த மாதம் 8ம் தேதி வரையில் வழங்கப்பட்டனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.