கருத்தடை மாத்திரையை பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை:! எடை கூடும் அபாயம்!

0
108

கருத்தடை மாத்திரையை பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை:! எடை கூடும் அபாயம்!

இந்தியாவை பொருத்தமாட்டில் கருக்கலைப்பு என்பது பண்பாட்டிற்கு முரண்பட்ட செயலாகவே கருதப்படுகிறது.
இதன் காரணமாக திருமணமான பெண்கள் கூட கருக்கலைப்பை பற்றி மற்றவர்களிடம் விவாதிக்க கூட தயங்குகின்றனர்.இது
மட்டுமின்றி முதல் குழந்தை பிறந்த பெண்களுக்கு கருத்தடை மாத்திரை,காப்பர் டி உள்ளிட்ட கரு தடை சாதனங்கள் சட்டபடியாக மருத்துவரகலால் பரிந்துரைக்கப்படுகின்றன.
இருப்பினும் இதனைப் பற்றிய விழிப்புணர்வு பெரும்பாலான பெண்களிடம் இல்லை என்றே கூறலாம்.

கருத்தடையை மாத்திரையை பயன்படுத்தினால் எடை கூடுமோ என்ற சந்தேகம் பலரதும் மனதில் ஓடிக் கொண்டிருக்கும்.இதோ இதற்கான பதில் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்!

கருத்தடை மாத்திரையை பயன்படுத்தினால் எடை கூடும் என்று நீங்கள் சந்தேகப்பட்டது உண்மைதான்.இருப்பினும் இந்த கருத்தடை மாத்திரையால் உண்டாகும் எடை அதிகரிப்பு தற்காலிகமானது.இது மட்டுமின்றி கருத்தடை மாத்திரையினால் கொழுப்பு கட்டுகின்றன என்பது தவறான கூற்றாகும்.

கருத்தடை மாத்திரையால் எடை கூடுவதற்கான காரணம் என்ன?

சில கருத்தடை மாத்திரைகளை நாம் பயன்படுத்தும் பொழுது உடல் அதற்கேற்றவாறு பழகும் வரை அதிக பசியை தூண்டும்.இதன் காரணமாக அடிக்கடி உணவு உண்ண நேரிடும்.சிலர் உணவுக்கு பதில் நொறுக்கு தீனி உண்ணும் பழக்கமும் கொண்டிருப்பர்.
இதன் காரணமாகவே உடல் எடை கூடுகிறதே தவிர கருத்தடை மாத்திரையால் கூடுவதில்லை.

ஆனால் ஒரு சில கருத்தடை மாத்திரைகளில் ஈஸ்ட்ரோஜன் அதிக அளவில் இருக்கும்.இதன் காரணமாக உடலில் நீர் பிடிப்பு ஏற்பட்டு உடல் வீங்கியதைப் போல் அதாவது பருமன் ஆனது போல் தெரியும்.

எப்போது எடை குறையும்?

கருத்தடை மாத்திரையால் கூடும் எடையானது தற்காலிகமானது.நீங்கள் கருத்தடை மாத்திரையை ஆரம்பத்தில் எடுத்துக் கொள்ளும்பொழுது உடல் அதுக்கேற்றவாறு தகவமைத்துக் கொள்ளும்.ஆனால் கருத்தடை மாத்திரையை எடுத்துக் கொண்ட 5 -லிருந்து 6 மாதத்திற்குள் உங்கள் எடை பழைய நிலைமைக்கு திரும்பும்.ஒருவேளை உங்கள் எடை பழைய நிலைக்கு திரும்பவில்லை என்றால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியமாகும்.

கருத்தடை மாத்திரையை பயன்படுத்துவர்கள் உட்கொள்ள வேண்டிய பொருட்கள்:

கருத்தடை மாத்திரையை உட்கொள்வோர் கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றும் நொறுக்கு தீனிகளை அதிகம் தவிர்ப்பது முக்கியமானதாகும்.
மேலும் இரும்பு சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் மற்றும் பழங்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது மிக மிக அவசியமாகும்.

author avatar
Pavithra