பொது இடங்களில் போன் சார்ஜ் செய்வோருக்கு எச்சரிக்கை:!! மால்வர் பரவும் அபாயம்!

0
79

பொது இடங்களில் போன் சார்ஜ் செய்வோருக்கு எச்சரிக்கை:!! மால்வர் பரவும் அபாயம்!

இந்தியாவில் பெரும்பாலானோர் வெளியூரு அல்லது அதிக நேரம் பயணம் செய்வோருக்கு பயன்படும் வகையில் பேருந்து மற்றும் பேருந்து நிலையங்கள் ரயில் மற்றும் ரயில் நிலையங்கள் என பல்வேறு பொது இடங்களில் சார்ஜிங் பாயிண்ட் வைக்கப்பட்டிருக்கும்.

இதுபோன்று செல்போன் சார்ஜ் ஸ்டேஷன் மற்றும் யூஎஸ்பி சார்ஜ் ஸ்டேஷன் போன்ற பொது இடங்களில் நமது செல்போனை சார்ஜ் செய்வதன் மூலம்,மக்களின் தனிப்பட்ட தரவுகளை,சைபர் மோசடி கும்பலால் திருட வாய்ப்பு இருப்பதாக ஓடிஸா காவல் துறையினர் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

அதாவது நாம் பொது இடங்களில் போனை சார்ஜ் செய்யும் போது,யூஎஸ்பி சார்ஜிங் கனெக்டர்கள் மூலம்
ஹேக்கர்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களில்
மால்வேரை புகுத்த முடியும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.இதனால் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்படுவதோடு வங்கி கணக்குகளில் மோசடியும் நடக்க வாய்ப்பிருப்பதாக காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

முடிந்தவரை பொது இடங்களில் ஆண்ட்ராய்டு செல்போனை சார்ஜ் செய்வதை தடுக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.