ரேஷன் கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை:! மக்களுக்கு இதை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்!

0
260

ரேஷன் கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை:! மக்களுக்கு இதை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்!

தற்போது தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அரிசி சர்க்கரை பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளது.

அதேபோன்று ரேஷன் கடையில் மழையால் நனைந்து சேதமான பொருட்களை மக்களுக்கு விற்கக் கூடாது என்று அனைத்து மண்டல கூட்டுறவு அலுவலர்களுக்கும், கூட்டுறவுத்துறை பதிவாளர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.நனைந்து சேதம் அடைந்த பொருட்களை உடனடியாக மாற்றி விட்டு, மாற்றாக நல்ல பொருட்களை ரேஷன் கடைகளுக்கு அனுப்ப வேண்டும் என்றும் அனைத்து மண்டலம் கூட்டுறவு அலுவலர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ரேஷன் கடை ஊழியர்கள் சேதமடைந்த பொருட்களை மக்களுக்கு விநியோகம் செய்யக்கூடாது என்றும்,இதன் பெயரில் புகார்கள் ஏதேனும் வந்தால்,அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Previous articleமக்களே உஷார்:! ஆண்களைக் குறிவைக்கும் வாட்ஸ்அப் நிர்வாண வீடியோகால்! பணம் பறிபோகும் அபாயம்!
Next articleபொது இடங்களில் போன் சார்ஜ் செய்வோருக்கு எச்சரிக்கை:!! மால்வர் பரவும் அபாயம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here