தீபாவளியன்று பட்டாசு வெடிக்க வெளியான கட்டுப்பாடு! காவல்துறையின் முக்கிய அறிவிப்பு 

0
147

தீபாவளியன்று பட்டாசு வெடிக்க வெளியான கட்டுப்பாடு! காவல்துறையின் முக்கிய அறிவிப்பு

தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிப்பது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பதற்கான விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.

  • உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அனுமதிக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த ரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் விற்கவும், வெடிக்கவும் வேண்டும்.
  • காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் என்று 2 மணி நேரத்தில் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும்.
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதி 89ன் படி பட்டாசு வெடிக்கும் இடத்திலிருந்து 4 மீட்டருக்கு அப்பால் 125 டெசிபல் அளவுக்கு மெல் ஓசை எழுப்பக் கூடிய பட்டாசுகளை தயாரிக்கவோ, பயன்படுத்தவோ, விற்கவோ கூடாது.
  • தடை செய்யப்பட்ட சீன தயாரிப்புகளை விற்பதோ, வெடிப்பதோ கூடாது.
  • எளிதில் தீப்பிடிக்கும் பகுதிகளில் உள்ள இடத்தில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.
  • பெட்ரோல் நிலையங்களுக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்.
  • பட்டாசுகளை கொளுத்தி மேலே எறிந்து விளையாடக் கூடாது.
  • மக்கள் நடமாடும் இடத்தில் கவனக்குறைவாக பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.
  • குடிசைப் பகுதி மற்றும் மாடி கட்டிடங்கள் அருகில் ராக்கெட் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.
  • எரியும் விளக்குகளுக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.
  • பெரியவர்கள் துணை இல்லாமல் குழந்தைகள் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கக் கூடாது.
  • பட்டாசு கடைகளுக்கு அருகில் சென்று புகை பிடிக்கக் கூடாது.
  • பட்டாசு கடைகளுக்கு அருகில் போட்டிக்கு பட்டாசு வெடிக்கக் கூடாது.
  • கால்நடைகள் அருகில் பட்டாசு வெடிக்கக் கூடாது.
Previous article“ஐசிசி தொடர்களில் இந்தியா அப்படி விளையாட வேண்டும்…” இங்கிலாந்து வீரர் கருத்து!
Next articleசாலைகளில் குப்பை கொட்டினால் இனி அபராதம்! வெளியானது அறிவிப்பு