வாவ்… சூப்பர் மேன் போல பறந்த கோலி… பீல்டிங்கிலும் ‘கிங்’ என நிரூபித்த கோலி!

0
175

வாவ்… சூப்பர் மேன் போல பறந்த கோலி… பீல்டிங்கிலும் ‘கிங்’ என நிரூபித்த கோலி!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலி ரன் மெஷின் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர்.

உலகக்கோப்பை  தொடர் தொடங்குவதற்கு முன்பு 15 நாட்களுக்கு முன்னரே சென்று அங்கு சில அணிகளோடு பயிற்சி ஆட்டங்களில் விளையாடியது. இதில் அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோலி, ஷமி போன்றவர்கள் இன்னும் போட்டிகளில் விளையாடவில்லை.

இந்நிலையில் இன்று ஆஸ்திரேலிய அணியோடு பயிற்சி ஆட்டத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. இந்திய அணியில் கே எல் ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அரைசதம் அடித்தனர். இதனால் இந்திய அணி 6 விக்கெட்கள் இழந்து 186 ரன்கள் சேர்த்தது.

பின்பு பந்து வீசிய இந்திய அணி கடைசி ஓவரில் 4 விக்கெட்கள் வீழ்த்தி இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தனது அபாரமான பீல்டிங் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் இரண்டு விக்கெட்களுக்குக் காரணமாக அமைந்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.

பின்ச் எடுத்த சிங்கிளை தடுத்த கோலி, மிகச்சிறப்பான த்ரோ மூலமாக டிம் டேவிட்டை ரன் அவுட் ஆக்கினார். மீண்டும் இதே போல இருபதாவது ஓவரின் மூன்றாவது பந்தில் பேட் கம்மின்ஸ் அடித்த பந்தை எல்லைக் கோட்டுக்கு அருகே நின்ற கோலி சூப்பர் மேன் போல தாவி ஒற்றைக்கையால் பிடித்து அசத்தினார். இந்த கேட்ச் போட்டியின் முடிவையே மாற்றியது.

இன்று இந்த இரண்டு அசாத்திய விக்கெட்களின் மூலம் கோலி தன்னை பீல்டிங்கிலும் கிங் என நிரூபித்துள்ளார்.

Previous articleஅமேசான் குடோனில் ஆட்டைய போட்ட ஆசாமிகள்! பரபரப்பு சம்பவம்!
Next articleதமிழ்நாடு அரசின் கீழ் இயங்குவது தொழிலாளர் நலத்துறையா அல்லது முதலாளி நலத்துறையா? – சீமான் ஆவேசம்