நவம்பர் மாதம் முதல் எம்பிபிஎஸ் படிப்புகளின் முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்கம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு!

0
212
first-year-class-of-mbbs-courses-starts-from-november-the-announcement-made-by-minister-ma-subramanian
first-year-class-of-mbbs-courses-starts-from-november-the-announcement-made-by-minister-ma-subramanian

நவம்பர் மாதம் முதல் எம்பிபிஎஸ் படிப்புகளின் முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்கம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு!

நேற்று சென்னையில் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவ படிப்பில் நடப்பாண்டின் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்.அப்போது அவர் கூறுகையில் சிறப்பு பிரிவு கலந்தாய்வு நேரடியாகவோ மற்றும் பொதுக் கலந்தாய்வு இணையவழியாகவும் நடைபெற உள்ளது.அரசு மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள இடங்கள் ,தனியார் கல்லூரிகளில் மாநில அரசு இடங்கள் என மொத்தம் 6067 எம்.பி.பி.எஸ்.இடங்கள் உள்ளன.

மேலும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்காக 1380 பிடிஸ் இடங்கள் உள்ளன.இதுமட்டுமின்றி தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 1,310 எம்.பி.பி.எஸ் இடங்கள் 740 பி.டி.எஸ் இடங்கள் உள்ளன.தற்போது இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகின்றது.

எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை தொடங்குகின்றது.மேலும் நாளை ராணுவ வீரர்களின் வாரிசுகள் ,விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடைபெறும்.அதனையடுத்து 20 ஆம் தேதி அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5சதவீத உள் இடஒதுக்கீடு கலந்தாய்வும் சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் நேரடியாக நடைபெறும்.

மேலும் பொது கலந்தாய்வைப் பொறுத்தவரை அக்டோபர் 19 முதல் 25ஆம் தேதி வரை இணைய வழியில் நடைபெறுகின்றன.அதனையடுத்து அக்டோபர் 21ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை  நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்காக கலந்தாய்வு இணையவழியே நடைபெறுகின்றது.

அதனைதொடர்ந்து 26 ஆம் தேதியன்று முதல் சுற்று முடிவுகள் வெளியிடப்படும்.27,28ஆம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெறும்.30ஆம் தேதி முதல் சுற்றின் இறுதி முடிவுகள் வெளியிடப்படும்.மேலும் நவம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் முதலாம் ஆண்டின் வகுப்புகள் தொடங்கப்படும் எனவும்  தெரிவித்தார்.

Previous articleமுன்னேறிய மாநிலம் என்று சொல்லப்படும் தமிழகத்தில் இன்னும் தீண்டாமை இருப்பது வெட்கக்கேடானது! ஆளுநர் ஆர்.என். ரவி ஆவேசம்!
Next articleஸ்ரீமதி வழக்கில் புதிய திருப்பம்! சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here