முன்னேறிய மாநிலம் என்று சொல்லப்படும் தமிழகத்தில் இன்னும் தீண்டாமை இருப்பது வெட்கக்கேடானது! ஆளுநர் ஆர்.என். ரவி ஆவேசம்!

0
78

75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா மற்றும் 90 ஆம் ஆண்டு ஹரிஜன் சேவா சங்கத்தின் ஆண்டு விழா நிகழ்ச்சி சேத்து பட்டில் இருக்கின்ற எஸ் ஆர் எஸ் சர்வோதயா பள்ளி மகளிர் விடுதி வளாகத்தில் நடந்தது.

இதில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், அடித்தட்டு மக்களுக்கான வளர்ச்சியை கொண்டு வருவதிலேயே காந்தி கூடுதல் கவனம் செலுத்தினார். மகாத்மா காந்தியால் ஆரம்பிக்கப்பட்ட ஹரிஜன சங்கத்தின் விழாவில் நாம் பங்கேற்றுள்ளோம். பிரிட்டிஷ்காரர்கள் நம்முடைய நாட்டை மதம், நிறம், இடங்கள் அடிப்படையில் பிரித்தார்கள். மகாத்மா காந்தி இந்தியர்கள் அனைவரும் ஒரு குடும்பம் என்ற வட்டத்திற்கு கொண்டு வந்தார்.

தீண்டாமை கொடுமை நிகழ்த்தும் பலர் இன்னும் இங்கே இருக்கிறார்கள் தீண்டாமையை கடைபிடிப்பதற்கு எதிராக கடுமையான சட்டங்கள் இருந்தும் இவை இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஹரிஜன மக்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள், ஹரிஜன பெண்கள் மீது நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்டவற்றை சகித்துக் கொள்ள முடியாது.

இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோரில் 86 சதவீதம் தண்டனைகளில் இருந்து தப்பி விடுகிறார்கள் தண்டிக்கப்படுவதில்லை என்பதை இது போன்ற குற்றங்கள் தொடர்ந்து நடைபெறுவதற்கு முதல் காரணமாக விளங்குகிறது.

இன்றும் பல பகுதிகளில், பல பள்ளிகளில், கோவில்களில் ஹரிஜன மக்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படும் அவலம் தமிழகத்தில் நிலவி வருகிறது. இந்த கொடுமைகள் நடைபெறுவது ஏன்? ஹரிஜன மக்கள் நம் மக்கள் அவர்களுடைய நிலை மேம்பட உறுதுணையாக இருப்பது நம்முடைய கடமை முன்னேறிய மாநிலம் என்று தெரிவிக்கும் தமிழகத்தில் இன்னும் தீண்டாமை என்ற கொடுமை நிலவுவது என்பது மிகவும் வெட்கக்கேடானது என்று தெரிவித்துள்ளார் ஆளுநர்.

மேலும் இது தொடர்பாக நாம் அனைவரும் நினைத்துப் பார்க்க வேண்டும் அதிகார அரசியல் போட்டியில் சமூகத்தில் ஒடுக்கப்பட்டோரை நாம் மறந்து விட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார் ஆர் என் ரவி.