மீண்டும் தொற்று பரவல்! விரைவில் ஊரடங்கு அமல்?
முதன் முதலில் சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் மிக வெகுவாக உலக நாடுகளுக்கு பரவியது.அதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் கொரோனா வைரஸ்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டதால் கொரோனா பரவல் குறைக்கப்பட்டது.
இந்நிலையில் கொரோனா பரவல் அடிக்கடி உருமாறி புதிய வகைகளில் பரவி வந்தது.அந்த வகையில் சமீபத்தில் ஒமைக்கரான் வைரஸ் புதியதாக உருமாறி பிஎப்.7 என்ற வைரஸ் சீனாவில் கண்டறியப்பட்டது.இந்த தொற்று மிகவும் எளிதாக பரவும் தன்மை கொண்டது.மேலும் இந்த கொரோனா வைரஸ் ஆனது முன்னதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தடுப்பூசி போட்டவர்கள் என அனைவருக்கும் பரவும் தன்மை கொண்டது என சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
மேலும் சீனாவில் இம்மாதம் முதல் வாரத்தில் இருந்தே தொற்று பரவல் காரணமாக மீண்டும் முழு ஊராடங்கு அமல்படுத்தப்பட்டது.அதுமட்டுமின்றி போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.சீனாவை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.இந்நிலையில் இந்தியாவில் முதன் முறையாக பிஎப்.7 வகை ஒமைக்ரான் தொற்று குஜராத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் அங்கு சேகரிக்கப்பட்ட மாதிரிகளை குஜராத் ஆராய்ச்சி மையத்தில் ஆய்வு செய்தபோது அதில் பிஎப்.7 வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து அங்கு கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.மேலும் இந்த தொற்றிற்கு தொண்டை வலி ,உடல் சோர்வு ,மூக்கு ஒழுகுதல் ,இரும்பல் போன்றவைகள் தான் அறிகுறி என கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் தினமும் 2ஆயிரம் தொற்றுகள் புதிதாக கண்டறியப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் என்பதால் தொற்று பரவல் அதிகரிக்காமல் இருக்க மத்திய சுகாதாரத்துறை கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.