கோப்பையை வெல்வதை விட இதுதான் முக்கியம்… ஹர்திக் பாண்ட்யா உற்சாகம்!

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா உலகக்கோப்பை தொடருக்கு முழு உடல் தகுதியோடு தயாராகியுள்ளார்.

இந்திய அணிக்கு இந்த உலகக்கோப்பை தொடரில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் கைகொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஹர்திக் பாண்ட்யா இருக்கிறார். கடந்த சில மாதங்களாக அவர் இரண்டிலும் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார்.

அவரின் செயல்பாடு குறித்து பேசிய ரோஹித் ஷர்மா “அவர் (ஹர்திக்) மீண்டும் வந்ததிலிருந்து, புத்திசாலியாக இருந்தார். அவர் அணியின் ஒரு பகுதியாக இல்லாதபோது, ​​அவர் தனது உடல் மற்றும் அவரது உடற்பயிற்சி முறைக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைக் கண்டுபிடித்தார், இப்போது அவர் 140  கி மி வேகத்தை எளிதாகக் கடந்து வருகிறார்.” எனப் பாராட்டியுள்ளார்.

இந்நிலையில் ஹர்திக் இந்த உலகக்கோப்பை தொடரில் பேட்டிங், பீல்டிங் இவற்றைவிட சிறப்பாக பீல்டிங் செய்வதையே முதல் இலக்காகக் கொண்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் கோப்பையை வெல்வது கூட அதன் பிறகுதான் எனக் கூறியுள்ளார்.

மேலும் “இந்த தொடரில் எனது கேரியரின் பெஸ்ட் கேட்ச்சை பிடிக்க ஆர்வமாக இருக்கிறேன். அதற்காக தயாராகி வருகிறேன். கடவுள் கருணை உள்ளவராக இருக்கிறார். எனது பிட்னெஸ் முன்னேறியுள்ளது.நான் நிறைய நேரத்தை பீல்டிங்கில் செலவிட்டு வருகிறேன். எனக்கு பீல்டிங் இயல்பாகவே சிறப்பாக வரும் . ஆனால் அதை நான் அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல விரும்புகிறேன்.” எனக் கூறியுள்ளார்.

Leave a Comment