மறைந்த வீரப்பனின் 18 ஆம் ஆண்டு நினைவு மேட்டூரில் அவரது மனைவி முத்துலட்சுமி அஞ்சலி செலுத்தினார்

Photo of author

By Anand

மறைந்த வீரப்பனின் 18 ஆம் ஆண்டு நினைவு மேட்டூரில் அவரது மனைவி முத்துலட்சுமி அஞ்சலி செலுத்தினார்

சேலம் மாவட்டம் மேட்டூரில் மறைந்த வீரப்பன் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவரது மனைவி முத்துலட்சுமி இன்று அஞ்சலி செலுத்தினார்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் தமிழக அதிரடிப்படையினரால் கடந்த 2004 ஆம் ஆண்டு வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதனையடுத்து வீரப்பனின் உடல் மேட்டூர் அருகே உள்ள மூலக்காட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து ஆண்டு தோறும் வீரப்பன் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

அந்த வகையில் இன்று வீரப்பனின் 18 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவரது மனைவி முத்துலட்சுமி குடும்பத்தினருடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் அவருடன் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.