“அவர் வந்ததில் இருந்தே இந்தியாவின் பேட்டிங் வேற லெவல் ஆகிடுச்சு…” பாகிஸ்தான் வீரர் புகழாரம்!
இந்திய அணியின் பேட்டிங்கைப் பற்றி பாகிஸ்தான் முன்னாள் வீரர் மிஸ்பா உல் ஹக் பேசியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
சமீபகாலமாக டி 20 கிரிக்கெட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அசுர பார்மில் இருக்கிறார் சூர்யகுமார் யாதவ். இதனால் தரவரிசையில் தொடர்ந்து முன்னேற்றம் கண்ட அவர், இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக தனக்கான இடத்தைப் பிடித்துள்ளார். சமீபத்தில் நடந்த ஆசியக் கோப்பை தொடரிலும் அவர் சிறப்பாக விளையாடி இருந்தார்.
இதனால் அவரை ரசிகர்கள் தென் ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸோடு ஒப்பிட்டு வருகின்றனர். இப்போது அவர் டி 20 போட்டிகளுக்கான தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். இந்நிலையில் நேற்றைய தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான அதிரடி ஆட்டத்தால் அவர் சர்வதேச போட்டிகளில் 1000 ரன்களை சேர்த்துள்ளார். இதனால் அவர் டி 20 தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
இந்நிலையில் முன்னாள் பாகிஸ்தான் அணியின் கேப்டன் மிஸ்பா உல் ஹக் இந்திய பேட்டிங் குறித்து பேசியுள்ளார். அதில் சூர்யகுமார் இருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலத்தை பெற்றுள்ளது என்று கூறியுள்ளார். அதில் “இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் வந்ததில் இருந்தே பேட்டிங் பலமாகியுள்ளது.
அவர் அனைத்து விதமான ஷாட்களையும் அசால்ட்டாக விளையாடுகிறார். எந்த பந்துவீச்சாளராலும் அவருக்கு பந்துவீச முடியவில்லை. அவருக்கு பிறகு ஹர்திக் பாண்ட்யா மற்றும் தினேஷ் கார்த்திக் இருப்பதால் பேட்டிங் ஆர்டர் மிகுந்த பலத்துடன் உள்ளது.” எனக் கூறியுள்ளார்.