தீபாவளிக்கு சுவையான பாசிப்பருப்பு லட்டு தயார்! நீங்களும் டிரை செய்து பாருங்கள்!
தீபாவளி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது புத்தாடை மற்றும் இனிப்பு வகைகள் தான்.அந்த வகையில் இனிப்பு பண்டங்களை கடைகளில் சென்று வாங்குவதை விட சுவையாகவும் ஆரோக்கியமானதாகவும் வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம். பாசிப்பருப்பு லட்டு இனிப்பு வகை எவ்வாறு செய்வது என்பதை இந்த காணலாம்.
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு அரைகிலோ,நெய் தேவையான அளவு,பொடி செய்த சர்க்கரை கால் கிலோ,சிறிதளவு பொடியாக நறுக்கிய பாதாம்,சிறிதளவு ஏலக்காய் தூள் .
செய்முறை :
முதலில் பாசிப்பருப்பை நெய்யில் வறுத்துக்கொள்ள வேண்டும்.அதன் பிறகு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.10அல்லது 15 நிமிடங்கள் கொதித்த பிறகு அதனை ஒரு தட்டில் மாற்றி ஒரு மணி நேரம் ஆற வைக்க வேண்டும் .அதன் பிறகு அவை நன்றாக ஆறிய பிறகு அதனுடன் பொடி செய்து வைத்துள்ள சர்க்கரை ,பொடி செய்த ஏலக்காய் தூள் ,பொடியாக நறுக்கி வைத்துள்ள ஏலக்காய் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.அதனையடுத்து அந்த கலவையை எடுத்து சிறு சிறு உறண்டைகளாக லட்டு வடிவில் பிடிக்க வேண்டும்.அதன் பிறகு பாதாம் துண்டுகளால் அலங்கரித்தால் உடனே பாசிப்பருப்பு லட்டு தயார்.