ஏய் கொஞ்சம் அமைதியா போங்கப்பா… ரசிகர்களை கெஞ்சி கேட்ட கோலி!

0
326

ஏய் கொஞ்சம் அமைதியா போங்கப்பா… ரசிகர்களை கெஞ்சி கேட்ட கோலி!

இந்திய அணி வீரர்கள் வலைப்பயிற்சி மேற்கொண்ட போது ரசிகர்கள் சத்தம் போட்டு கூச்சல் இட்டது அவர்களின் கவனத்தை சிதறச் செய்யும் விதமாக அமைந்தது.

உலகக்கோப்பை  தொடர் தொடங்குவதற்கு முன்பு 15 நாட்களுக்கு முன்னரே சென்று அங்கு சில அணிகளோடு பயிற்சி ஆட்டங்களில் விளையாடியது. இதில் அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலிய அணியோடு பயிற்சி ஆட்டத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. இந்திய அணியில் கே எல் ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அரைசதம் அடித்தனர். இதனால் இந்திய அணி 6 விக்கெட்கள் இழந்து 186 ரன்கள் சேர்த்தது. இந்த போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இதையடுத்து வரும் 23 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மெல்போர்னில் நடக்க உள்ளது. இந்த தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக இந்த போட்டி உள்ளது. போட்டி நடக்கும் நாளில் மழை பெய்ய 80 சதவீத வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் இன்று வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பக்கம் வந்த இந்திய ரசிகர்கள் அதை வீடியோ எடுத்துக்கொண்டும் சத்தமாக பேசிக்கொண்டும், வீரர்களை பேர் சொல்லி அழைத்துக்கொண்டும் இருந்தனர்.

அதனால் கடுப்பான கோலி ரசிகர்களைப் பார்த்து “அமைதியாக இருங்கள். எங்களுக்கு கவனம் சிதறுகிறது” எனக் கூற ரசிகர்கள் அமைதியாகினர். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருக்கிறது.

Previous article“பாபர் அசாம் சிறந்த பேட்ஸ்மேன் & கேப்டன்தான்… ஆனா?” – இளம் வீரரை நம்பும் சுரேஷ் ரெய்னா!
Next articleதீபாவளி – தந்தேரஸ் தினம் :  விளக்கு ஏற்றுவது ஏன்?  அதன் சிறப்புகள் மற்றும் செல்வ பூஜை!  புராணங்கள் சொல்லும் கதை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here