தனது உத்தேச இந்திய அணியை வெளியிட்ட கம்பீர்… முக்கிய வீரருக்கு இடமில்லை!
இந்தியாவுக்கு விளையாட வேண்டிய உத்தேச அணியை கவுதம் கம்பீர் வெளியிட்டுள்ளார்.
இந்திய அணி நாளை தங்கள் முதல் உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் இந்தியாவுக்காக விளையாடும் அணி என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முக்கியமாக ஆறாவது இடத்தில் தினேஷ் கார்த்திக்கா அல்லது ரிஷப் பண்ட்டா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் தனது உத்தேச அணியை அறிவித்துள்ளார் முன்னாள் வீரர் கம்பீர். அவர் வெளியிட்டுள்ள அணியில் ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பளித்துள்ளார். ரிஷப் பண்ட் இடது கை ஆட்டக்காரர் என்பதும், அணியின் பேட்டிங் வரிசையில் மற்ற எல்லோரும் வலது கை ஆட்டக்காரர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கம்பீரின் உத்தேச அணி
ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, அக்ஷர் பட்டேல், ஹர்சல் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல், அர்ஸ்தீப் சிங்/புவனேஷ்வர் குமார், முகமது ஷமி.
நாளை நடக்க உள்ள போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போட்டி நடக்கும் அன்று மைதானம் இருக்கும் பகுதியில் சுமார் 80 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கைகள் வெளியாகியுள்ளன. இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்படி பாதிக்கப்பட்டால் இரு அணிகளுக்கும் புள்ளிகள் சமமாக பிரித்து வழங்கப்படும். இதனால் ஒளிபரப்பு விளம்பர வருவாய் மூலம் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.