எஸ் சி மற்றும் எஸ் டி மக்களுக்கு இட ஒதுக்கீடு உயர்வு!! பட்டியலின மக்களுக்கு அரசின் தீபாவளி பரிசு!!
கர்நாடக மாநிலத்தின் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீடு அதிகரிக்குமாறு மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருந்த நிலையில் நடந்து முடிந்த அனைத்து கட்சி கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் இனி, எஸ் சி மற்றும் எஸ்டி மக்களுக்கு 15 இலிருந்து 17 சதவீதம் இட ஒதுக்கீடு உயர்த்தியதாக கூறினர். அதற்கு அடுத்தபடியாக பழங்குடியின மக்களுக்கு மூன்றில் இருந்து ஏழு சதவீதமாக உயர்த்தி உள்ளதாக தெரிவித்தனர்.
இது குறித்து அம் மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டது. இட ஒதுக்கீடு உயர்வு குறித்து அம் மாநில கவர்னர் தாவரசன் ஒப்புதல் அளிக்குமாறு கடிதம் அனுப்பினர். கடிதத்தை பின்னணியில் ஆய்வு செய்த கவர்னர் இட ஒதுக்கீடு உயர்வு குறித்து ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த இடஒதுக்கீடு உயர்வானது தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி நம் மக்களுக்கு இது தீபாவளி பரிசு என அம்மாநில முதல்வர் கூறியுள்ளார்.