உலகளவில் வாட்ஸ் ஆப் சேவை முடக்கம்! மெட்டா நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!

0
141
WhatsApp service affected for two hours worldwide! The announcement made by Meta Company!
WhatsApp service affected for two hours worldwide! The announcement made by Meta Company!

உலகளவில் வாட்ஸ் ஆப் சேவை முடக்கம்! மெட்டா நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!

மக்கள் அதிகளவு பயன்படுத்தும் செயலியாக இருப்பது வாட்ஸ் ஆப் தான்.மேலும் நேற்று வாட்ஸ் ஆப் பயனர்கள் அந்நிறுவனத்திடம் புகார் தெரிவித்தனர்.அந்த புகாரில் நேற்று பிற்பகலில் தீடீரென பல்வேறு பயனாளர்களுக்கு வாட்ஸ் ஆப் செயல்படாமல் போனது.பயனாளர்கள் அனுப்பும் தகவல் செல்லாமலும் அவர்களுக்கு வரும் தகவல் வராமல் இருப்பது போன்றவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இந்தியா ,பிரிட்டன் உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் இந்த பாதிப்பு ஏற்பட்டது.மேலும் ட்விட்டரில் வாட்ஸ் ஆப் டவுன் என்ற தலைப்பிலான ஹேஸ்டேக் அதிகம் பகிரப்பட்டது.அதனைதொடர்ந்து சில பயனர்கள் வாட்ஸ் ஆப் சேவையை சரியாக பயன்படுத்த முடியவில்லை என தெரிவித்தனர்.இந்த பிரச்சனைகள் அனைத்தும் சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பிரச்சனைகள் விரைவில் சரி செய்யப்படும் என வாட்ஸ் ஆப்-பின் தலைமை நிறுவனமான மெட்டா தெரிவித்துள்ளது.சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு வாட்ஸ் ஆப் மீண்டும் செயல்பட தொடங்கியது.வாட்ஸ் ஆப் செயல்படாததால் பெரும்பாலோனோர் தகவல்களை பரிமாறி கொள்வதில் சிரமம் ஏற்பட்டது என தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Previous articleதமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் வெளியிட்ட அறிக்கை! சொந்தக் கட்சியினரே நகைத்த கொடுமை!
Next articleபயங்கரவாதத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் அழிக்க வேண்டிய கடமை தமிழக காவல்துறைக்கு இருக்கிறது!