தமிழக ஆளுநருக்கு வார்னிங் கொடுத்த மநீம தலைவர் கமல்! பாஜக வின் மறைமுக அரசியல் தலைவராக ஆளுநர் செயல்படுவது அழகல்ல!

தமிழக ஆளுநருக்கு வார்னிங் கொடுத்த மநீம தலைவர் கமல்! பாஜக வின் மறைமுக அரசியல் தலைவராக ஆளுநர் செயல்படுவது அழகல்ல!

குறிப்பிட்ட சில மாநிலங்களில் ஆளும் அரசுக்கு ஆதரவு தெரிவிக்காமல், அதற்கு மாற்றாக எதிர்க்கட்சி தலைவராக ஆளுநர்கள் செயல்பட்டு வருவதாக தொடர்ந்து குற்றம்சாட்டி  வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் நீட் விலக்கு கோரி ஆளும் அரசு கொடுத்த மசோதாவிற்கு தற்பொழுது வரை ஆளுநர் எந்த ஒப்புதலும் வழங்கவில்லை. அதுமட்டுமின்றி தமிழக ஆளுநர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஆர்எஸ்எஸ் குறித்து மறைமுகமாக மக்களுக்கு தெரிவிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் வைக்கின்றனர்.

இதுபோல மற்ற மாநிலங்களில் உள்ள ஆளுநர்களும் பாஜகவிற்கு ஆதரவாகவே செயல்பட்டு வருவதாக பல புகார்கள் வந்த வண்ணமாகவே தான் உள்ளது. இச்சமயத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த பதிவு ஆளுநரை எச்சரிப்பது போல உள்ளது.

பாஜகவை எதிர்க்கும் கட்சியானது ஆளும் கட்சியாகவுள்ள மாநிலங்களில் ஆளுநர்கள் தங்கள் அதிகார எல்லையைத் தாண்டி எதிர்க்கட்சித் தலைவர் போல் செயல்படுவதாகவே ஐயம் எழுகிறது. கேரள ஆளுநரின் நடவடிக்கைகள் இதற்கு நல்ல உதாரணம். தமிழகத்திலும் இதே போக்குதான் நிலவுகிறது.

Leave a Comment