பெண்களுக்கு ஏற்படும் அடி வயிற்று வலி நிமிடத்தில் குணமாக இது ஒன்றே போதும்!!

0
484

பெண்களுக்கு ஏற்படும் அடி வயிற்று வலி நிமிடத்தில் குணமாக இது ஒன்றே போதும்!!

பெண்கள் பலரும் மாதவிடாயின் போது அடி வயிற்று வலி மற்றும் வயிற்று வலி, இடுப்பு வலி போன்ற பல்வேறு வலிகளால் அவதிப்படுகின்றனர்.சில பெண்கள் இதற்காக மாத்திரை மருந்துகளை கூட எடுத்துக் கொள்கின்றனர்.ஆனால் மாதவிடாயின் போது மாத்திரை மருந்துகள் எடுத்துக் கொள்வது குழந்தை பிறப்பதில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றன.

எனவே இது போன்ற எந்தவித பக்க விளைவுகளுமின்றி உங்கள் அடி வயிற்று வலி மற்றும் வயிற்று வலி,இடுப்பு வலி போன்ற மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பல்வேறு வலிகளுக்கு சிறிது நேரத்தில் தீர்வு காண கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை ஒருமுறை ட்ரை செய்து பாருங்கள்.

அடிவயிற்று வலி நிமிடத்தில் குணமாக!

உங்களுக்கு அடி வயிற்று வலி ஏற்படும் நேரத்தில் சிறிதளவு சோம்பை வாயில் போட்டு நன்றாக மென்று அதன் சாறுடன் முழுங்கினால் உடனடியாக அடி வயிற்று வலியிலிருந்து தீர்வு காணலாம்.

வயிற்று வலி மற்றும் இடுப்பு வலி உடல் சோர்வு உள்ளிட்ட பிரச்சனைகள் தீர!

இரண்டு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் சீரகம் மற்றும் ஒரு டீஸ்பூன் சோம்பு ஆகியவற்றை கலந்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.இந்த இரண்டு டம்ளர் தண்ணிர் ஒரு டம்ளர் வரும் வரை கொதிக்க விட்டு அதனை வெதுவெதுப்பான சூட்டிற்கு வந்தவுடன் ஒரு டீஸ்பூன் தேனை கலந்து குடித்து வந்தால் அரை மணி நேரத்திற்குள் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி, இடுப்பு வலி உடல் சோர்வு உள்ளிட்ட பிரச்சனைகள் குறையும்.

Previous articleஇந்த ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும்!
Next articleமுருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளும்! அதன் விளக்கமும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here