சர்ச்சைக்குரிய 3 ரன்கள் விவகாரம்… முன்னாள் நடுவர் சைமன் டஃபெல் சொன்ன கருத்து!

0
149

சர்ச்சைக்குரிய 3 ரன்கள் விவகாரம்… முன்னாள் நடுவர் சைமன் டஃபெல் சொன்ன கருத்து!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த போட்டியில் இந்தியா நான்கு விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 போட்டியில் இந்திய நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்த இந்திய வீரர் விராட் கோலியை உலகக் கிரிக்கெட் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் விமர்சகர்கள் பாராட்டியுள்ளனர்.

இந்த போட்டியில் கோஹ்லி டீப் ஸ்கொயர் லெக்கில் சிக்ஸருக்கு இடுப்பளவு ஃபுல் டாஸை சிக்ஸ் அடித்தார். அந்த பந்து இடுப்புக்கு மேல் வந்ததால் நோ பாலாக அறிவிக்கப்பட்டது.  அடுத்த பந்து ப்ரீ ஹிட். அதில் கோலி பவுல்ட் ஆனார். ஆனால் பந்து விக்கெட் கீப்பர் திசையில் பவுண்டரியை நோக்கி ஓட கோலியும் தினேஷ் கார்த்திக்கும் ஓடி 3 ரன்கள் சேர்த்தனர்.

ஆனால் அந்த பந்தை டெட் பாலாக அறிவித்திருக்க வேண்டும் என பலரும் சமூகவலைதளங்களில் கருத்துகளைப் பகிர்ந்தனர். இது தொடர்பாக பேசியுள்ள முன்னாள் நடுவர் சைமன் டஃபெல் “பந்து ஸ்டம்பைத் தாக்கி தெர்டு மேன் திசையில் சென்றதை தொடர்ந்து பேட்டர்கள் மூன்று ரன்கள் எடுத்த பிறகு, பைஸ் சமிக்ஞை செய்வதில் நடுவர் சரியான முடிவை எடுத்தார். ஃப்ரீ ஹிட் பந்தில் பவுல்ட் மூலமாக ஸ்ட்ரைக்கரை அவுட்டாக்க முடியாது, எனவே பந்து ஸ்டம்பைத் தாக்கியதால் டெட் பந்தாக வில்லை- பந்து இன்னும் விளையாடிக்கொண்டிருக்கிறது மற்றும் பைகளுக்கான சட்டங்களின் கீழ் அனைத்து நிபந்தனைகளும் திருப்திகரமாக உள்ளன.” எனக் கூறியுள்ளார்.