ஒரே இரவில் திருப்பதியை தூக்கி சாப்பிட்ட திருவண்ணாமலை: கிரிவலத்தின் உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

0
181

ஒரே இரவில் திருப்பதியை தூக்கி சாப்பிட்ட திருவண்ணாமலை: கிரிவலத்தின் உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

பஞ்சபூதங்களின் அக்னி ஸ்தலமாக கருதப்படும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையையே சிவனாக எண்ணி பௌர்ணமி நாட்களில் கோடிக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபடுவது வழக்கம்.

அதன்படி கடந்த அக்டோபர் 9-ம் தேதியன்று புரட்டாசி பௌர்ணமி கிரிவலம் அதிகாலை 4.09 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை 3.11 மணி வரை நடைபெற்றது.இந்த புரட்டாசி பௌர்ணமியில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் அண்டை மாநிலத்தில் இருந்தும் கோடிக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாரை தரிசித்து உண்டியலில் பணமாகவும், தங்கமாகவும்,வெள்ளியாகவும் காணிக்கைகள் செலுத்தி சென்றனர்.

இந்த புரட்டாசி பௌர்ணமி கிரிவலம் காணிக்கை கணக்குகளை அறநிலை துறை வெளியிட்டுள்ளது.அதன்படி ஒரே நாளில் 1 கோடியே 30 லட்சம் ரூபாய் ரொக்க பணமும்,129 கிராம் தங்கமும் 2,374 வெள்ளியும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருப்பதாக அறநிலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த ஒரு நாள் வசூலானது திருப்பதி கோவிலை விட அதிகமானது என்றும் கூறப்படுகிறது.இது வரலாற்றிலேயே தடம் பதித்த உண்டியல் காணிக்கையாக கருதப்படுகிறது.

Previous articleஇந்த இரண்டு பிரிவினருக்கு மட்டும் உதவித்தொகையில் புதிய மாற்றம்! அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!
Next articleபுகையிலை விற்பனைக்கான தடையை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவு