வாரிசு திரைப்படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்… வெளியான அறிவிப்பு!

0
190

வாரிசு திரைப்படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்… வெளியான அறிவிப்பு!

வாரிசு திரைப்படத்தின் இசை உரிமையை முன்னணி பாலிவுட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

நடிகர் விஜய்யின் 66 ஆவது படமான ‘வாரிசு’ படத்தை தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தில் விஜய்யோடு சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என சில மாதங்களுக்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்டது. இதையடுத்து விரைவில் படத்தின் ஆடியோ ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பாக படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் அடுத்த வாரத்தில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதற்கு முன்பாக படத்தை வாங்கியுள்ள ஆடியோ வெளியீட்டு நிறுவனத்தைப் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது.

பாலிவுட்டில் பாலிவுட்டின் பிரபல ஆடியோ நிறுவனமான டி சீரிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் இசை வெளியீடு பற்றிய அப்டேட் வெளியாகும் என தெரிகிறது.

வாரிசு படத்துக்கு போட்டியாக அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கலை ஒட்டி ரிலீஸ் ஆகிறது. இரண்டு படங்களும் மிகப்பெரிய நடிகர்களின் படங்கள் என்பதால் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல்கள் எழுந்துள்ளது. இரண்டு படங்களுக்கும் சம அளவில் திரைகள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.

Previous articleகுட் நியூஸ்: தொடர்ந்து மூன்றாவது நாளாக ராக்கெட் வேகத்தில் குறையும் தங்கத்தின் விலை! ரூ 480 குறைவு!
Next articleநியுசிலாந்து வீரர் பிலிப்ஸ் அபார சதம்… இலங்கைக்கு 168 ரன்கள் இலக்கு!