அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த நாட்டு ஆமணக்கு எண்ணெய்!
பாரம்பரிய முறையில் 200 ஆண்டுகளுக்கு முன் நம் முன்னொர்கள் தயாரித்து பயன்படுத்திய நாட்டு ஆமணக்கு எண்ணெய் (இளநீர், சிரகம், ஓமம், கருஞ்சிரகம்) சேர்த்து பழமையான முறைப்படி ஆமணக்கு எண்ணெய் (விளக்கெண்ணெய்) எண்ணற்ற பயன்களைக் கொண்டுள்ளது. இம்முறையில் தயாரிக்கப்படும் ஆமணக்கு எண்ணெய் பல மருத்துவ குணங்கள் நிறைந்தாகும்.
பயன்படுத்தும் முறையும் ஆமணக்கு எண்ணெயின் பயன்களும்:
பருப்பு வேக வைக்கும் போது அரை டீஸ்பூன் விளக்கெண்ணைய் சேர்த்துக் கொள்ளலாம். ரசம் வைக்கும் போது 4 சொட்டு சேர்த்தால் சுவை கூடும், சளி முறியும்
அசைவ சமையலுக்கு பயன்படுத்தும் மசாலா வதக்க விளக்கெண்ணெய் உபயோகித்தால் சுவையும், மணமும் சிறக்கும்.
வருடத்துக்கு 40 நாட்கள் தினமும் இரவு உணவுக்கு ஒரு மணி நேரத்துக்குப் பின் 5 சொட்டுகள் வெந்நீரில் கலந்து மிதமான சூட்டுடன் பருகி வருவதன் மூலம் கீழ்க்காணும் நன்மைகள் கிடைக்கும்.
பயன்கள்:
1. மலச்சிக்கல் தீரும்
2. வயிறு சம்பந்தமான கோளாறுகள் நீங்கும்.
3. வாயுத்தொல்லை நீங்கும்
4. வயிற்றுப் புண் நீங்கும்
5. வயிற்றில் உள்ள கசடுகள் நீங்கும்
6. வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும்
7. உடலுக்கு குளிர்ச்சி தரும்
இரவில் படுக்கும் போது முகத்தில் தேய்த்துக் கொள்ளலாம்,
8. மிருதுவாக மசாஜ் செய்து கொள்ள முகச் சுருக்கம் மறையும்.
9. கரும்புள்ளிகள் மறையும்.
10. கண்களை சுற்றியுள்ள கருவளையம் மறையும்
11. தலைமுடி, கண் முடி, புருவம் அடர்ந்து வளரும்.
12. கை கால், முட்டி வலி மற்றும் வயிற்று வலிகளுக்கு சிறந்த நிவாரணியாகும்
13. கண் எரிச்சல் மற்றும் கண் சிவந்து இருந்தால் இரவில் 2சொட்டு கண்களில் விட நல்ல
தூக்கமும் கண் தெளிவு பெறும்
14.காது மூக்கு கண் எரிச்சலுக்கு சிறந்த நிவாரணியாகும்
15. தலைக்கு தேங்காயெண்ணெய் கலந்து தேய்த்துவந்தால் முடி வளரும் வேர்கள் பலப்படுவதுடன் முடி கருமையாக வளரும்
16.பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அடி வயிற்று
வலிக்கு வயிற்றின் மேல் தடவ வலி சரியாகும்.