நவம்பர் 8-ல் முழு சந்திர கிரகணம்: எங்கெங்கே பார்க்க முடியும்? வான் இயற்பியல் நிபுணர்கள் தகவல்!

0
185

நவம்பர் 8-ல் முழு சந்திர கிரகணம்: எங்கெங்கே பார்க்க முடியும்? வான் இயற்பியல் நிபுணர்கள் தகவல்!

நவம்பர் 8 ஆம் தேதி நிகழும் முழு சந்திர கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியும் என வான் இயற்பியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகின் பல பகுதிகளில் கடந்த 25 ஆம் தேதி பகுதி சூரிய கிரகணம் நிகழ்ந்த நிலையில், வருகிற நவம்பர் மாதம் 8-ஆம் தேதி முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இதனை உலகின் பல பகுதிகளில் காண முடியும். இதனை கொல்கத்தாவிலும், நாட்டின் பிற பகுதிகளிலும் பார்க்க முடியும் என தகவல்.

இந்தியாவில் மட்டுமின்றி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ரஷ்யாவின் குறிப்பிட்ட பகுதிகள், வடதென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற பல இடங்களில் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முழு சந்திர கிரகணம் அன்று, மதியம் சுமார் 2:30 மணிக்கு தொடங்கும் சந்திர கிரகணம் 3:46 மணிக்கு முழு கிரகண நிலையை அடையும் எனவும் வான் இயற்பியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

முழு சந்திர கிரகணம் 5:11 மணிக்கு முடியும் எனவும், பகுதி கிரகணம் 6:19 மணிக்கு முடிவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த முழு சந்திர கிரகணம் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி நிகழ்வு என வான் இயற்பியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Previous articleகோவையில் இனி ஒரு முறை இப்படி ஒரு சம்பவம் நடைபெறக்கூடாது! அண்ணாமலை அட்வைஸ்!
Next articleநாளை முதல் அமலுக்கு வரும் திட்டம்! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!