பேட்ஸ்ன்மேன்களை விட்டுவிட்டு அஸ்வினைக் குற்றம் சொல்லும் முன்னாள் வீரர்! – இது என்னப்பா நியாயம்!

0
155

பேட்ஸ்ன்மேன்களை விட்டுவிட்டு அஸ்வினைக் குற்றம் சொல்லும் முன்னாள் வீரர்! – இது என்னப்பா நியாயம்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தென் ஆப்பிரிக்க அணியின் தோல்விக்கு அஸ்வின்தான் காரணம் என்று கூறியுள்ளார்.

இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக மிக மோசமாக விளையாடி அந்த போட்டியை இழந்தது , கடுமையாக விமர்சனங்களை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மிக மோசமாக இருந்தது. சூர்யகுமார் யாதவ் தவிர மற்ற அனைவரும் சொதப்பினர். அதனால் இந்திய அணி 133 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

அதன் பின்னர் இந்திய பவுலர்கள் சிறப்பாக பந்துவீசி கடைசி ஓவர் வரை போட்டியை எடுத்து சென்றனர். ஆனால் ஒரு கட்டத்தில் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் மில்லர் மற்றும் மர்க்கரம் ஆகியோர் சிறப்பாக  விளையாடி வெற்றியைத் தட்டி சென்றனர். இந்த போட்டியில் அஸ்வின் அதிகபட்சமாக 4 ஓவர்கள் வீசி 43 ரன்கள் கொடுத்தார்.

இந்த போட்டி பற்றி பேசிய சுனில் கவாஸ்கர் “இந்திய அணியின் பீல்டிங்கால் தோற்றது என்று நான் நம்பமாட்டேன். ஏனென்றால் சில மோசமான் தருணங்களில் மூத்த வீரர்கள் கூட அதுபோன்ற தவறை செய்வார்கள். அது இயல்பானதுதான். ஆனால் ஒரு வீரர் 43 ரன்கள் விட்டுக்கொடுத்ததுதான் பிரச்சனை என்று நான் பார்க்கிறேன். அடுத்த போட்டியில் சஹால் விளையாட வேண்டும் என நான் நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

கவாஸ்கரின் இந்த கருத்து அஸ்வின் மீதான தனிப்பட்ட வெறுப்புக் காரணமாக அமைந்தது போல உள்ளது என ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

Previous articleகுஜராத் தொங்கு பாலம் விபத்து போல மீண்டும் நடக்காமல் இருக்க அன்புமணி ராமதாஸ் கூறிய ஆலோசனை 
Next articleமத்திய அரசு வழங்குவதை கூட மாநில அரசு வழங்குவதில்லை! அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வை உடனே வழங்க ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்